ஆலன் கேரீர் இன்ஸ்டிடியூட் சார்பில் ஜெஇஇ மெயின் தேர்வுக்காக இன்றுமுதல் இலவச ஆன்லைன் தேர்வு

ஜெஇஇ மெயின் தேர்வை எழுத இருப்போரின் வசதிக் காக ஆலன் கேரீர் இன்ஸ்டி டியூட் சார்பில் இன்று (மார்ச் 18) முதல் ஆன்லைன் பயிற்சி தேர்வு நடத்தப்படுகிறது.

இதுகுறித்து ஆலன் கேரீர் இன்ஸ்டிடியூட் இயக்குநர் நவீன் மகேஷ்வரி கூறியதா வது: ஜெஇஇ மெயின் தேர்வு வரும் ஏப்ரல் மாதம் நடை பெறவுள்ளது. இந்த தேர்வை என்டிஏ எனப்படும் தேசிய சோதனை நிறுவனம் ஆன் லைன் மூலம் மேற்கொள்கிறது. இதில் பங்கேற்கும் மாணவர் களுக்கு கணினியை பயன் படுத்த தெரிந்திருக்க வேண்டி யதும் அவசியமாகிறது.

தற்போது கோவிட்-19 அச் சம் காரணமாக அரசு கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. இந்நிலை யில் ஜெஇஇ மெயின் தேர்வு எழுதும் மாணவர்களின் நன் மைக்காக ஆலன் மையத்தில் ஆன்லைன் மூலம் இலவசமாக மாதிரி தேர்வு இன்றுமுதல் (மார்ச் 18) நடைபெறும்.

3 மணி நேரத்தில் 75 கேள்வி களுக்கு ஆங்கிலம், இந்தியில் பதிலளிக்கும் வகையில் இந்த பயிற்சி தேர்வு இருக்கும். இது போல மொத்தம் 10 தேர்வுகள் நடத்தப்படும். நாடு முழுவதும் உள்ள மாணவ, மாணவிகள் onlinetestseries.in என்ற இணையதளம் மூலம் இந்த மாதிரி தேர்வை எழுத முடியும்.

இதை மாணவர்கள் பயன் படுத்திக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment