தமிழ் வழியில் பயின்றால் வேலைவாய்ப்பில் முன்னுரிமை மசோதா தாக்கலினால் அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்!

தேசிய ஆசிரியர் சங்கத்தின்சார்பில் மாநில பொது செயலாளர் கந்தசாமி வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக சட்ட பேரவையில் 10 , 12 மற்றும் பட்ட படிப்புகளில் தமிழ் வழியில் பயின்றவர்கள் அரசு வேலைகளில் முன்னுரிமை வழங்கும் மசோதாவைமீன்வளத்துறை அமைச்சர் தாக்கல் செய்துள்ளார் இது மிக வரவேற்கப்பட வேண்டிய மசோதா இதனால் தமிழ் கற்பதிலும் தமிழ் வழியில் கற்பதற்கும் ஆர்வம் அதிகமாகும் , அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகமாகும் , தனியார் பள்ளிகளும் தமிழ் வழியில் கற்பித்தலை முன்னிலைப்படுத்தும் ஆகவே தேசிய ஆசிரியர் சங்கம் சார்பில் இதை வரவேற்கிறேன் மேலும் இலங்கையில் தமிழ் மீனவர்கள் தாக்கப்படுதலைதவிர்க்ககச்சத்தீவை மீட்பது தான் நிரந்தர தீர்வு என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்து இருப்பதையும் தேசிய ஆசிரியர் சங்கம் வரவேற்கிறது என இவ்வாறு ஆசிரியர் சங்க மாநில பொதுச் செயலாளர் கந்தசாமி கூறினார் .

No comments:

Post a Comment