பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, மார்ச் 27 ல் துவங்க இருந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகவும், ஏப்.,14க்கு பிறகு தேர்வு நடக்கும் எனவும் முதல்வர் இ.பி.எஸ்., அறிவித்துள்ளார். 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 27 ல் துவங்க இருந்தது. கொரோனா அச்சுறுத்தலை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன. அதே நேரத்தில் 10, பிளஸ் 1, பிளஸ்2 தேர்வுகள் திட்டமிட்டபடி நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், முதல்வர் இ.பி.எஸ்., சட்டசபையில் வெளியிட்ட அறிவிப்பு: மார்ச் 27 ல் துவங்க இருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது. ஏப்.,14க்குபின் தேர்வு நடத்தப்படும். இதற்கான புதிய அட்டவணை வெளியிடப்படும். பிளஸ்1 மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் திட்டமிட்டபடி நடக்கும் என தெரிவித்தார்.

No comments:

Post a Comment