கொரோனா வைரஸ் - தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு பெற்றோர்களுக்கு வேண்டுகோள்.

பெற்றோர்களுக்கு வேண்டுகோள்
20.03.2020

தன் பிள்ளைகளை வெளியில் செல்ல அனுமதிக்க கூடாது, வீடுகளில் தூய்மையை கடைப்பிக்க பெற்றோர்களை

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்
===========
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது உலகம் முழுவதும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர்  இந்தியாவிலும் கொரோனா வைரசால் இதுவரை நான்கு பேர் மரணம் அடைந்துள்ளனர் 200கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர் ,இந்த சூழ்நிலையில் மத்திய அரசும் தமிழக அரசும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகிறது, அதன் ஒரு பகுதியாக பள்ளிகள் கல்லூரிகளுக்கு வருகின்ற 31ம் தேதிவரை விடுமுறை அளித்துள்ளது , பெற்றோர்கள் கவனத்திற்கு தன் பிள்ளைகளை வெளியில் செல்ல அனுதிக்க கூடாது அதே போன்று பிள்ளைகளை தூய்மையாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் ,

வீட்டில் மட்டுமே இருக்க தங்கள் கவனத்தை பிள்ளைகள் மேல் செலுத்த வேண்டும் ஏன் என்றால் விடுமுறை என்றால் உள்ளாசமாக இருக்க வேண்டும் என்று கிராமப்புறத்தில் ஏரி குளம் கிணறுகளில் குளிக்க நண்பர்களுடன் குளிக்க செல்வார் இதனால் விபத்துக்கள் நடக்க வாய்ப்புள்ளது கடலோர பகுதிகளில் இருக்கும் பிள்ளைகள் கடலில் குளிக்க செலவார் இதனாலும் விபத்து நடக்க வாய்ப்பு இருக்கிறது , இரு சக்கர வாகனத்தில் பெற்றோருக்கு தெரியாமல் ரேசிங் செய்வார்கள் அதனையும் கண்காணிக்க வேண்டும்

ஏன் என்றால் திரையரங்குகள் இல்லை பொழுதுபோக்கு பூங்காக்கள் இல்லை பெரிய அளவிலான தாங்கள் இல்லை விளையாட்டு போட்டிகள் அதனால் பிள்ளைகள் உள்ளாசமாக இருக்க பெற்றிடம் பொய் சொல்லிவிட்டு இது போன்ற விபரீத இடங்களுக்கு செல்வார்கள் அதனாலும் கொரோனா வைரஸ் பரவாமல் பார்த்துக்கொள்ளவும் பெற்றோர்கள் தன் பிள்ளைகளை விழுப்புடன் பார்த்துக்கொள்ள வேண்டும்  நல்லது கெட்டது அறியாத வயது , பள்ளிகள் கல்லூரிகள் திறக்கின்ற வரைக்கும் யருடனும் அனுப்பாமல்  வீட்டிலயே இருக்கவேண்டும் , பெற்றோர்கள் ஆசிரியர்களுக்கு தொலைபேசியல் தொடர்பு கொண்டு தினம் ஒரு பாடத்திற்கு வினாக்களுக்கு பதில்களை எழுத பழக பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும் , தினம் காலை மாலை குளிக்கள் வைக்க வேண்டும் கைகளை அடிக்கடி சோப்பால் கழுவ சொல்ல வேண்டும் ,

அதேபோன்று தற்காப்பு நடவடிக்கையாக வருகின்ற 22ம் தேதி ஞாயிற்று கிழமை பிரதமர் அறிவுறுத்தலின் படி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பெற்றோர் உட்பட யாரும் வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம்

பிள்ளைகளை  எச்சரிக்கயோடும் பாதுகாப்போடும் கண்காணிக்க பெற்றோர்களை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரிகள் நல கூட்டமைப்பு சார்பில் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்
~~~
சா.அருணன்
நிறுவனத் தலைவர்
தமிழ்நாடு அரசு ஊழியர்கள்  ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு
9445454044

No comments:

Post a Comment