கரோனா வைரஸ் பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பொதுத் தேர்வுகள் தள்ளிவைப்பு ஜேஇஇ பிரதான நுழைவுத் தேர்வும் ரத்து

கரோனா வைரஸ் பாதிப்பின் தீவிரத்தால் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பொதுத்தேர்வுகள் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளன. மேலும், பொறியியல் படிப்புகளுக் கான ஜேஇஇ பிரதான நுழைவுத் தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) பாடத் திட்டத்தின்கீழ் 10, 12-ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த பிப்ரவரி 24-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த தேர்வுகள் வரும் ஏப்ரல் 14-ம் தேதி வரை நடைபெற உள்ளன.

இதற்கிடையே கரோனா வைரஸ் பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் அனைத்து கல்வி நிறுவனங் களுக்கும் மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை தரப்பட்டுள்ளது. எனினும், ஏற்கெனவே அறிவித்தபடி பொதுத்தேர்வுகள் தொடர்ந்து நடைபெறும் என சிபிஎஸ்இ தெரிவித்திருந்தது.

அதேநேரம் மாணவர்கள் நலன்கருதி பொதுத்தேர்வுகளை தள்ளிவைக்க பெற்றோர் தரப்பில் தொடர் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. அதையேற்று மார்ச் 31-ம் தேதி வரை நடை பெறவிருந்த சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட் டுள்ளன.

மார்ச் 31-க்கு பின் அறிவிக்கப்படும்

இதுகுறித்து சிபிஎஸ்இ செயலா ளர் அனுராக் திரிபாதி வெளியிட்ட அறிவிப்பில், ‘‘10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 31-ம் தேதி வரை அறிவிக்கப்பட்டிருந்த பொதுத்தேர்வு அட்டவணை மாற்றப்பட்டுள்ளது. இந்தத் தேர்வு கள் மீண்டும் நடைபெறும் தேதிகள் மார்ச் 31-ம் தேதிக்குப் பின் அறிவிக்கப்படும். மேலும், தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகளும் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது” என்று கூறியுள்ளார்.

மேலும், ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி பொதுத்தேர்வுகளும் தள்ளி வைக் கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வு களுக்கான குழுமம் (சிஐசிஎஸ்இ) வெளியிட்ட அறிவிப்பில், ‘‘கரோனா வைரஸ் பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மார்ச் 31-ம் தேதி வரை திட்டமிடப்பட்டிருந்த ஐசிஎஸ்இ (10-ம் வகுப்பு), ஐஎஸ்சி (12-ம் வகுப்பு) பொதுத்தேர்வுகள் தள்ளிவைக்கப்படுகின்றன.

பொது சுகாதாரம் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்களின் உடல் நலனைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப் படுகிறது. புதிய தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்'' என்று கூறப்பட்டுள்ளது.

இதேபோல், ஏப்ரல் முதல் வாரத் தில் நடைபெற இருந்த பொறியியல் பட்டப்படிப்புகளுக்கான ஜேஇஇ பிரதான நுழைவுத் தேர்வும் ரத்து செய்யப்படுவதாகவும், நிலைமையை சீராய்வு செய்த பின்னர் மாற்று தேதிகள் அறிவிக் கப்படும் எனவும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.பொது சுகாதாரம் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்களின் உடல் நலனைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்படுகிறது. புதிய தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்

No comments:

Post a Comment