பிஎட் கல்லூரிகளில் இணையதளம் கட்டாயம் ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவுறுத்தல்

பிஎட் கல்லூரிகள் ஏப்ரல் 10-ம் தேதிக்குள் கட்டாயம் இணைய தளம் தொடங்க வேண்டும் என்று ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் அறிவுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் இயங்கும் பிஎட் கல்லூரிகளுக்கு பல்வேறு விதிமுறைகளை மத்திய அரசின் தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் (என்சிடிஇ) வகுத்துள்ளது. அதன்படி எல்லா கல்லூரிகளும் பிரத்யேக இணையதளம் தொடங்கி அதில் தங்கள் கல்லூரியின் உள் கட்டமைப்பு வசதிகள், நிர்வாகக் குழு, முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் விவரம், மாணவர்களுக்கான அறிவிப்புகள், தேர்வு நடைமுறை கள், விடுதிகளின் அமைப்பு ஆகிய வற்றை விரிவாக வெளியிட வேண் டும். ஆனால், பெரும்பாலான கல்லூரிகள் இணையதளம் தொடங்காமல் இருக்கின்றன. இதுதொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகத்துக்கு தொடர் புகார்கள் வந்தன. இதையடுத்து அனைத்து பிஎட் கல்லூரிகளும் தனியாக இணையதளம் ஏப்ரல் 10-ம் தேதிக் குள் தொடங்க வேண்டும். கல்லூரி கல்வி சார்ந்த செயல் பாடுகள் முழுவதையும் இணைய தளம் வழியாகவே மேற்கொள்ள வேண்டும். இந்தப் பணிகளை முடித்து அதன் அறிக்கையை பல்கலை.க்கு அனுப்ப வேண்டும் என்று கடிதம் வாயிலாக ஆசிரியர் கல்வியியில் பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment