கல்வியைப் பொறுத்தவரை அரசியல் வேண்டாம் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு தரவேண்டும் எதிர்க்கட்சிகளுக்கு முதல்வர் வலியுறுத்தல்

கல்வித் தரத்தை மேம்படுத்த அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிர்கட்சிகள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

இதுதொடர்பாக சட்டப்பேர வையில் நேற்று நடைபெற்ற விவாதம்:

ஈஸ்வரப்பா (திமுக): புதிய பாடத்திட்டம் அதிக அளவு இருப்பதுடன், கடினமாகவும் இருக்கிறது. இந்தப் பாடங்களை நடத்தி முடிக்க போதுமான கால அவகாசமும் தரப்படுவதில்லை. இதனால் ஏற்படும் சிரமங்களால் ஆசிரியர்கள் மிகுந்த மனஅழுத் தத்தில் தவிக்கின்றனர்.

பள்ளிக்கல்வித் துறை அமைச் சர் கே.ஏ.செங்கோட்டையன்: புதிய பாடத் திட்டத்தில் பாடங் கள் கூடுதலாக இருப்பது குறித்து ஏற்கெனவே அரசின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. அவற் றைக் களைய குழு அமைக்கப் பட்டுள்ளது. அக்குழு பரிந்துரை யின்படி அனைத்து குறைபாடு களையும் சரி செய்து அடுத்த ஆண்டு இது நடைமுறைப்படுத் தப்படும்.

ஈஸ்வரப்பா: குறைபாடுகள் இருப்பதை ஒப்புக்கொள்ளும் அமைச்சர் இந்த ஆண்டு படிக்கும் மாணவர்களின் எதிர்காலம் குறித்து விளக்கம் தரவேண்டும்.

செங்கோட்டையன்: கடந்த ஆண்டு பிளஸ் 1 வகுப்புக்கு புதிய பாடத் திட்டத்தில் தேர்வு எழுதிய மாணவர்களில் 95 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதனால் மாணவர்களின் நலன் பற்றிய கவலை வேண்டாம்.

ஈஸ்வரப்பா : சாதாரண மாருதி கார் ஓட்ட முடியாத நபரை பார் முலா ரேஸ் காரை தந்து ஓட்டச் சொன்னால் விபத்துதான் நடை பெறும். எனவே, ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சி அளித்து விட்டு பின்னர் புதிய பாடத் திட்டத்தை அமல்படுத்தியிருக்க வேண்டும்.

முதல்வர் பழனிசாமி: தற்போதைய காலச்சூழல் மற்றும் எதிர்கால தேவைகளுக்கு ஏற்ப சிறந்த கல்வியை மாணவர்களுக்கு தரவேண்டியது அவசியம். தரமான கல்வியை வழங்கினால் மட்டுமே மாணவர்களால் தங்கள் வாழ்வில் நல்ல நிலைக்குச் செல்ல முடியும். அதன் அடிப்படையில்தான் கல்வி யாளர்கள் குழுவை கொண்டு புதிய பாடத் திட்டம் வடிவமைக்கப் பட்டுள்ளது. தற்போது அதிலுள்ள குறைபாடுகளையும் களைய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.

ஈஸ்வரப்பா: நான் சில பள்ளி களில் சென்று ஆய்வு மேற் கொண்டபோது பிளஸ் 2 மாண வர்களில் பலருக்கு அறிவியலில் உள்ள சில அடிப்படை விதிகள்கூட தெரியாமல் இருக்கிறது.

முதல்வர் பழனிசாமி: அதற்காகத்தான் முன்கூட்டியே பொதுத் தேர்வுகளை வைத்து மாணவர்களின் திறனை அறிய முயற்சித்தோம். ஆனால், அதற்கு சில தடைகள் வந்ததால் அவை நீக்கப்பட்டது. எனவே, கல்வித் தரத்தை மேம்படுத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு தரவேண்டும். கல்வியைப் பொறுத்தவரை அரசியல் என்பதே கிடையாது. மாணவர்களின் நலன் கருதி சிறந்த ஆலோசனைகளை யார் கூறினாலும் அதை அரசு பரி சீலனை செய்யும்.

இவ்வாறு விவாதம் நடைபெற் றது.

1 comment: