அரசு ஊழியர்களுக்கு உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ரத்து

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு உயர் கல்வித் தகுதிக்கு ஊக்க ஊதிய உயர்வு (ஓர் ஊக்க ஊதிய உயர்வு என்பது ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் 3 சதவீதம் மற்றும் அதற்கு உரிய அக விலைப்படி) வழங்கப்படுகிறது. அதே போல், சார்நிலை பணியாளர்கள் துறை தேர்வில் கணக்கு தேர்வில் (பகுதி-1) தேர்ச்சி பெற்றாலும் இதேபோல் ஓர் ஊக்க ஊதிய உயர்வு பெறலாம்.

இந்த நிலையில், உயர் கல்வித்தகுதி மற்றும் துறைத்தேர்வு தேர்ச்சிக்கு வழங் கப்பட்டு வந்த ஊக்க ஊதிய உயர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தலைமைச் செயலர் கே.சண் முகம் பிறப்பித்துள்ளார். இது 10.3.2020 முதல் அமலுக்கு வந்துள்ளது. ஏற்கெ னவே உயர் கல்வித்தகுதி மற்றும் துறை தேர்வு தேர்ச்சிக்காக ஊக்க ஊதியம் பெற்று வருவோரிடமிருந்து பிடித்தம் எதுவும் செய்யப்படாது.

1 comment:

  1. first pention kidaiyathunninga apparam padichavanga ellarukkum work kidaiyathuninga aduthu insentive kidaiyathunguringa nalla irunga

    ReplyDelete