கும்மிடிப்பூண்டி அருகே சிறப்பு வகுப்புக்கு வந்த மாணவி விபத்தில் உயிரிழப்பு

கும்மிடிப்பூண்டி அருகே பள்ளி சிறப்பு வகுப்புக்கு வந்த 10-ம் வகுப்பு மாணவி, சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம், பொதுமக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப் பூண்டி அருகே உள்ள மாதர்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தேவி (15), மகேஸ்வரி(15). தோழிகளான இரு வரும் மாதர்பாக்கம் அரசினர் பெண்கள் உயர்நிலை பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று பள்ளியில் நடைபெற்ற சிறப்பு வகுப்புக்கு இருவரும் சென்றனர். அப்போது, மதிய உணவு இடைவேளையில், இருவரும் தோழி ஒருவரின் இருசக்கர வாகனத்தில் மாதர்பாக்கம் பகுதியில் சுற்றிக் கொண்டிருந்தனர். அப்போது, மாநெல்லூர் பாலம் அருகே சென்றபோது, எதிர்பாராதவிதமாக சாலை குறியீட்டு கம்பத்தின் மீது இருசக்கர வாகனம் மோதியது. இதில் படுகாயமடைந்த தேவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மகேஸ்வரி, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், கரோனா வைரஸ் அச்சம் காரணமாக நாடு முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், சிறப்பு வகுப்பில் பங்கேற்ற பள்ளி மாணவி விபத்தில் உயிரிழந்த சம்பவம், பொதுமக்களை சோகத்தில் ஆழ்த்தி யுள்ளது.

இதுகுறித்து, பாதிரிவேடு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment