பள்ளிகளுக்கு தேர்வுத் துறை புதிய உத்தரவு

தேர்வுத்துறை இயக்குநர் சி.உஷாராணி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப் பிய சுற்றறிக்கை விவரம்:

பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் அகமதிப்பீடு மற்றும் செய்முறை தேர்வு மதிப்பெண்களை சம்பந்தப்பட்ட பள்ளிகள் வழியாக கடந்த பிப்ரவரி 27-ம் தேதிக்குள் தேர்வுத்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத் தப்பட்டிருந்தது.

ஆனால், சில மாவட்டங்களில் செய்முறைத் தேர்வு மற்றும் அகமதிப்பீடு மதிப்பெண் இது வரை பதிவேற்றம் செய்யப் படாமல் உள்ளது. தற்போது மாணவர்கள் மதிப்பெண் விவரங்களை பதிவு செய்ய மார்ச் 10-ம் தேதி வரை கூடுதல் அவகாசம் வழங்கப்படுகிறது. எனவே, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளும் தங்கள் எல்லைக்குட்பட்ட பள்ளி களின் தலைமை ஆசிரியர் களுக்கு விரைவாக பணிகளை முடிக்க உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment