50 சதவீத மத்திய அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற அனுமதி

மத்திய அரசு ஊழியர்களில் 50 சதவீதம் பேர் வீடுகளில் இருந்து பணியாற்ற வேண்டும் என்று மத்தியப் பணியாளர் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக அந்த அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

மத்திய அரசின் அனைத்து துறைகளி லும் குரூப் பி, சி பிரிவு ஊழியர்களில் 50 சதவீதம் பேர் மட்டும் அலுவலகத்துக்கு வந்தால் போதும். மீதமுள்ள 50 சதவீத ஊழியர்கள் வீடுகளில் இருந்து பணியாற்ற வேண்டும். யாரெல்லாம் வீட்டில் இருந்து பணியாற்ற வேண்டும் என்பது குறித்த பணிக் குறிப்பேட்டை அந்தந்த துறையின் தலைவர்கள் தயாரிக்க வேண்டும்.அலுவலகத்துக்கு அருகே வீடுகள் அமைந்திருக்கும் ஊழியர்கள், அதிகாரிகள் தங்களது சொந்த வாகனத்தில் பணிக்கு வருமாறு துறையின் தலைவர்கள் உத்தரவிட வேண்டும்.

அலுவலக ஊழியர்களின் பணி நேரத்தை மூன்று வகையாகப் பிரிக் கலாம். காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும், காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் காலை 10 மணி முதல் மாலை 6.30 மணி வரையிலும் ஊழியர்கள் பணி செய்ய அனுமதிக்கலாம்.

வீடுகளில் இருந்து பணியாற்றும் ஊழியர்களை, அவர்களது உயரதிகாரி தொலைபேசி, மின்னணு தகவல் தொடர்பு மூலம் எப்போது கூப்பிட்டாலும் பதில் அளிக்க வேண்டும். அவசர பணியாக இருந்தால் அலுவலகத்துக்கு நேரில் வர வேண்டும். நிதித் துறை சேவைகள், பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்திலும் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

மத்திய அரசு அலுவலகங்களுக்கு பொதுமக்கள், பார்வையாளர்கள் வரு வதைக் குறைக்க வேண்டும். பார்வையா ளர்களுக்கான பாஸ் வசதி திட்டம் ரத்து செய்யப்படுகிறது. உயரதிகாரியை சந்திக்க விரும்பும் மக்கள், முறையான அனுமதி பெற வேண்டும். முழுமையான சோதனைக்குப் பிறகே அவர்களை அலு வலகத்துக்குள் அனுமதிக்க வேண்டும்.

அனைத்து மத்திய அரசு அலுவலகங் களிலும் காய்ச்சலைக் கண்டறியும் தெர் மல் ஸ்கேனர் வசதியை ஏற்படுத்த வேண் டும். வாயில் பகுதிகளில் கைகளை சுத் தம் செய்யும் திரவத்தை வைத்திருக்க வேண்டும். அரசு ஊழியர்கள் யாருக் கேனும் கரோனா வைரஸ் காய்ச்சல் அறி குறிகள் இருந்தால் உடனடியாக அவர் களை மருத்துவமனையில் சேர்க்க வேண்டும்.

ஆலோசனைக் கூட்டங்கள் நடத்த வதை தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக காணொலி காட்சி மூலம் கூட் டங்களை நடத்தலாம். கோப்புகள், முக் கிய ஆவணங்களை மின்னஞ்சல் மூல மாக அனுப்ப வேண்டும். மத்திய அரசு அலுவலகத்தில் செயல்படும் உடற் பயிற்சி கூடங்கள், மனமகிழ் மன்றங்கள், குழந்தைகள் காப்பகங்களை உடனடி யாக மூட வேண்டும். இருமல், தும்மல் உள்ள ஊழியர்கள் தங்களை தனிமைப் படுத்த விரும்பினால் உடனடியாக அனு மதி வழங்க வேண்டும். இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில அரசுகளுக்கு அறிவுரை

மத்திய பணியாளர் அமைச்சக செயலா ளர் சந்திரமவுலி அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்பியுள்ள கடிதத் தில், "மத்திய அரசு ஊழியர்களின் நலன் காக்க முன்னெச்சரிக்கை நடவடிக் கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதேபோல மாநில அரசுகளும் உரிய நடவடிக்கை களை எடுக்க வேண்டும். மாநில அரசு அலுவலகங்களில் தெர்மல் ஸ்கேனர் களை பொருத்த வேண்டும். மாநில அரசு அலுவலகங்களுக்கு பொதுமக்கள் வருவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அலுவலக வாயிலில் கைகளை சுத்தம் செய்யும் திரவத்தை வைக்க வேண்டும்" என்று அறிவுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment