தங்கம் விலை 4 நாட்களில் பவுனுக்கு ரூ.2,240 குறைவு

தங்கத்தின் விலை 4-வது நாளாக குறைந்துள்ளது. சென்னையில் பவுனுக்கு ரூ.632 குறைந்து ரூ.31,472-க்கு விற்கப்பட்டது.

கோவிட் - 19 வைரஸ் அச்சத் தால் ஏற்றுமதி, இறக்குமதி உள்ளிட்ட வர்த்தகமும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. தங்கத்தில் செய்து வரும் முதலீடும் சிறிய அளவில் குறையத் தொடங்கிவிட்டது. இதற்கிடையே, சர்வதேச அளவில் தங்கத்தின் தேவையும் குறைந்துள்ளதால், விலை படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த 10-ம் தேதி 22 கேரட் தங்கம் ஒரு பவுன் ரூ.33,712-க்கு விற்கப்பட்டது.

இந்நிலையில், தொடர்ந்து 4-வது நாளாக தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னையில் நேற்று 22 கேரட் தங்கம் பவுனுக்கு ரூ.632 குறைந்து ரூ.31,472-க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் ரூ.3,934-க்கு விற்பனை ஆனது. இதுவே, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.4,013-க்கு விற்கப்பட்டது. கடந்த 4 நாட்களில் மட்டும் ஒரு பவுனுக்கு ரூ.2,240 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தங்கம் விலை பெரிய அளவில் குறைந்ததால், வாடிக்கையாளர் கள் மத்தியில் நகை வாங்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க பொதுச் செயலாளர் எஸ்.சாந்த குமார் கூறும்போது, ‘‘கோவிட் 19 வைரஸ் அச்சத்தால் உலக நாடு களில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல, தங்கத் தில் முதலீடு செய்வதும் குறைந் துள்ளதால், கடந்த 4 நாட்களாக தங்கம் விலை குறைந்து வருகிறது.வணிகத்தில் நிலையற்ற தன்மை நீடிப்பதால் மேலும் சில நாட்களுக்கு தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளது. விலை பெரிய அளவில் குறைந்ததால், நகைக் கடைகளில் மக்கள் கூட்டம் கணிசமாக அதிகரித்துள்ளது’’ என்றார்.

No comments:

Post a Comment