மழலையர், தொடக்கப் பள்ளிகளுக்கு 31-ம் தேதி வரை விடுமுறை 16 மாவட்டங்களில் திரையரங்குகள், வணிக வளாகங்களை மூட உத்தரவு வைரஸ் தடுப்புக்கு ரூ.60 கோடி நிதி ஒதுக்கி முதல்வர் அறிவிப்பு

தமிழகத்தில் கோவிட்-19 வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.60 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்கு வரும் 31-ம் தேதி வரை விடுமுறை அளித்தும் மாநில எல்லையோர 16 மாவட்டங்களில் திரையரங்குகள், வணிக வளாகங் களை மூடவும் முதல்வர் பழனி சாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் பழனி சாமி நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு எடுத்த தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளின் காரணமாக, கோவிட்-19 வைரஸ் நோய் பாதிப்பு இல்லையென்ற போதி லும், இந்த நோய் அண்டை மாநிலங் களில் இருந்து பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. விமான நிலையங்களில் கண்காணிப்பு பணிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மாநிலத்தின் எல்லையோர மாவட்டங்களில் உள்ள சோதனைச் சாவடிகளில், நோய் கண் காணிப்புப் பணிகள் மற்றும் தூய்மைப்படுத்தும் பணிகளைப் போர்க்கால அடிப்படையில் ஒருங் கிணைந்து மேற்கொள்ள வரு வாய்த் துறை, காவல் துறை, போக்குவரத்துத் துறை, சுகாதாரத் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத் தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மழலையர் பள்ளிகளுக்கும் (எல்கேஜி, யுகேஜி), தொடக்கப் பள்ளிகளுக்கும் (1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை) வரும் 31-ம் தேதி வரை விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் எல்லையோர மாவட்டங் களான தேனி, கன்னியாகுமரி, திருப்பூர், கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, தென்காசி, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப் பேட்டை, ஈரோடு, திண்டுக்கல், தர்மபுரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள எல்லை யோர தாலுகாக்களில் உள்ள திரையரங்குகளையும் மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங் களையும் வரும் 31-ம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

கோவிட்-19 வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட மாநில பேரிடர் நிதியில் இருந்து சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறைக்கு ரூ.30 கோடி, போக்குவரத்துத் துறைக்கு ரூ.5 கோடி, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு ரூ.4 கோடி, நக ராட்சி நிர்வாகத்துக்கு ரூ.6 கோடி, ஊரக வளர்ச்சித் துறைக்கு ரூ.5 கோடி, பேரூராட்சி இயக்குநர கத்துக்கு ரூ.2 கோடி, இந்து சமய அறநிலையத் துறைக்கு ரூ.3 கோடி, பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்வித் துறைக்கு ரூ.2 கோடி, அங்கன்வாடி மையங்களுக்கு ரூ.50 லட்சம், மாவட்ட ஆட்சியர் களுக்கு ரூ.2.5 கோடி ஆக மொத்தம் ரூ.60 கோடி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மாநிலத்தில் பிற பகுதிகளில் உள்ள திரையரங்குகள், வணிக வளாகங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களான கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் ஆகிய வற்றில் தூய்மைப்படுத்தும் பணி களை தீவிரமாக மேற்கொள்ளவும் இப்பணிகளைக் கண்காணிக்க தனி அலுவலர்களை நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பொது இடங்களில் குறிப்பாக கோயில்கள், மசூதிகள், தேவால யங்களுக்கு வரும் மக்களுக்கு நோய் தடுப்பு குறித்து விழிப் புணர்வு ஏற்படுத்தவும் சளி, இரு மல், காய்ச்சல் உள்ளவர்களைக் கண்டறிந்து, அவர்கள் மக்கள் கூடும் இடங்களுக்கு வரு வதைத் தடுக்க உரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வும் இந்து சமய அறநிலையத் துறை, சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு ஆணை யிடப்பட்டுள்ளது.

மேற்கூறிய பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகளைக் கண் காணிக்க மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளான மாவட்ட கண்காணிப்பு அலுவலர் களுக்கு உத்தரவிடப்பட்டிருக் கிறது. கோவிட்-19 வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை மாவட்ட ஆட்சியர்கள் வருவாய் நிர்வாக ஆணையருக்கு தினமும் அனுப்ப வேண்டும். அவர் அந்த அறிக்கை களைத் தொகுத்து சுகாதாரத் துறை அமைச்சர் மற்றும் முதல்வருக்கு தினசரி அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும்.

பொதுமக்கள் மற்ற மாநிலங் களுக்கு பயணிப்பதையும் பொது இடங்களில் அதிகளவில் கூடுவதை யும் அடுத்த 15 நாட்களுக்கு தவிர்க்க வேண்டும். கூட்டம் நிறைந்த பொது இடங்களுக்கு வயதானவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், குழந்தை கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த நபர்கள் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

பொதுமக்கள் அனைவரும் தனிநபர் சுகாதாரத்தை பேணவும் குறிப்பாக வீட்டுக்குள் நுழையும் போதும் குறிப்பிட்ட இடைவெளி யிலும் அவ்வப்போதும் கைகளை சோப்பு போட்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும். கைகளைச் சுத்தம் செய்யாமல் முகத்தை தொடக்கூடாது. பெற்றோர் தங்கள் குழந்தைகள் விடுமுறை நாட் களின்போது குழுவாக விளையா டாமல் கண்காணிப்பதுடன், வீட்டுக் குள் நுழைந்தவுடனும் அவ்வப் போதும் கைகளை சோப்பு போட்டு சுத்தமாக கழுவவதை உறுதி செய்ய வேண்டும்.

கோவிட்-19 வைரஸ் நோயை தடுப்பதற்கான முயற்சிகளை அனைவரும் மேற்கொண்டால் தான் வெற்றி பெற முடியும் என்பதைக் கருத்தில் கொண்டு அனைத்து தரப்பு மக்களும் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். நோய் அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.

இவ்வாறு முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment