ஜூன் பருவ இறுதி தேர்வுக்கு ஏப்.30 வரை விண்ணப்பிக்கலாம் இக்னோ பல்கலைக்கழகம் அறிவிப்பு

மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலைக்கழகம் (இக்னோ) ஜூன் பருவ இறுதி தேர்வுக்கு தாமத கட்டணம் இல்லாமல் ஆன்லைனில் விண்ணப்பிப்பதற் கான கடைசி தேதியை ஏப்ரல் 30 வரை நீட்டித்துள்ளது.

மாணவர்கள் www.ignou.ac.in என்ற இணையதளத்தில் தேர்வுக் கான விண்ணப்பத்தை ஆன்லை னில் சமர்ப்பிக்கலாம். மேலும், அசைன்மென்டுகள் சமர்ப்பிப்பதற் கான கடைசி தேதியும் ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment