கரோனா வைரஸ் நிவாரணம் கல்லூரி ஆசிரியர்கள் ரூ.2 கோடி நிதியுதவி

தமிழக அரசின், கரோனா வைரஸ் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக ரூ.2 கோடி நிதி வழங்க முடிவு செய்துள்ளதாக தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் த.வீரமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, ‘‘தமிழகத்தில் 119 அரசு கலைக் கல்லூரி கள் மற்றும் அரசு கல்வியி யல் கல்லூரிகளில் 5 ஆயிரம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். கரோனா வைரஸ் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக ரூ.2 கோடி நிதி வழங்க முடிவு செய்துள்ளோம். இதற்காக அரசுக் கல்லூரி ஆசிரியர்கள் தங்களது ஒரு நாள் ஊதியத்தைக் கொடுக்க முன் வந்துள்ளனர்.

இம்மாத சம்பளத்தில் ஒரு நாள் ஊதியத்தைப் பிடித்தம் செய்து கொள்ளுமாறு உயர் கல்வித் துறைக்கும், தமிழக முதல் வருக்கும் கடிதம் அனுப்பியுள் ளோம்’’, என்றார்.

கோவை எம்.பி. ரூ.1 கோடி நிதி

கோவை மக்களவைத் தொகுதி உறுப்பினர் பி.ஆர்.நட ராஜன், கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை களுக்காக தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1 கோடி நிதி ஒதுக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment