மொத்தம் 242 காலியிடங்கள் உதவி இன்ஜினியர், உதவியாளர், தட்டச்சர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு

உதவி இன்ஜினியர், சுற்றுச்சூழல் விஞ்ஞானி, உதவியாளர், தட்டச்சர் ஆகிய பணிகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என மாசு கட்டுப் பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறி யிருப்பதாவது:-

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரி யத்தில் 78 உதவி இன்ஜினியர், 70 சுற்றுச் சூழல் விஞ்ஞானி, 38 உதவியாளர், 56 தட்டச்சர் பணியிடங்கள் போட்டித்தேர்வு மூலம் நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ளன.

உதவி இன்ஜினியர் பதவிக்கு சுற்றுச்சூழல் பொறியியல், கெமிக்கல், பெட்ரோலியம் ரீபைனிங் பாடங்களில் எம்இ, எம்டெக் பட்டம் பெற்றவர்களும், சுற்றுச்சூழல் விஞ்ஞானி பதவிக்கு வேதியியல், விலங்கியல், தாவரவியல், நுண்ணுயிரியல், உயிரி-வேதியியல், மரைன் பயாலஜி, சுற்றுச்சூழலில் உள்ளிட்ட பாடங்களில் எம்எஸ்சி பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். உதவியாளர் பதவிக்கு பட்டப் படிப்பும் கணினியில் குறைந்தபட்சம் 6 மாத கால சான்றிதழ் அல்லது டிப்ளமா அவசியம். தட்டச்சர் பதவிக்கு பட்டப்படிப்பும் ஆங் கிலம் மற்றும் தமிழில் ஹையர் கிரேடு தேர்ச்சியும், கணினியில் சான்றிதழ் அல்லது டிப்ளமா தேர்ச்சியும் பெற்றி ருக்க வேண்டும். வயது 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டுப் பிரிவினர் (பிசி, எம்பிசி, பிசி-முஸ்லிம், எஸ்சி, எஸ்சி) வயது வரம்பு 35.

உரிய கல்வித் தகுதியுடையவர்கள் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் இணைய தளத்தை (www.tnpcb.gov.n) பயன் படுத்தி மார்ச் 26 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கடந்த 4.3.2019 அன்று வெளியிட்ட அறிவிப்பின்படி ஏற்கெனவே விண்ணப்பித்தவர்கள் தற் போது விண்ணப்பிக்க தேவையில்லை. ஆன்லைன் தேர்வு நாள் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment