கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் 22-ம் தேதி சுய ஊரடங்கை கடைபிடியுங்கள் சில வாரங்களுக்கு அவசியமின்றி யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்

கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தப்பிக்க வரும் 22-ம் தேதி மக்களால் மக்களுக்காக ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பொதுமக்கள் கருத வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். அன்றைய தினம் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

கரோனா வைரஸ் வேகமாக பரவி வரு கிறது. இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு நாட்டு மக்களுக்கு உரை யாற்றினார். அப்போது அவர் கூறிய தாவது:

கரோனா வைரஸ் மனித இனத்தின் மிகப் பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. இது உலகம் முழுவதும் பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுபோன்ற அபாயகரமான சூழலை உலக நாடுகள் முன் எப்போதும் எதிர்கொண்டதில்லை. முதல் மற்றும் 2-ம் உலகப் போரில் பாதிக்கப்பட்ட நாடுகளைவிட கரோனா வைரஸால் அதிக நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த வைரஸால் நமக்கு பாதிப்பு ஏற்பட வில்லை என எண்ணிக் கொண்டிருக்க வேண் டாம். கரோனா வைரஸை கட்டுப்படுத்து வதற்கான தீர்வோ தடுப்பு மருந்தோ இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே, இதை எதிர்கொள்ள சுய கட்டுப்பாடும் பொறுமை யும் அவசியமாகிறது. நாட்டு மக்கள் மத்திய, மாநில அரசுகள் கூறும் அறிவுரை களை ஏற்று அதன்படி நடந்துகொள்ள வேண்டும்.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க வேண்டுமானால், பாதிக்கப்பட்டவர்களிட மிருந்து விலகி இருப்பது அவசியம். எனவே, ஓரிடத்தில் அதிகப்படியானோர் கூடுவதைத் தவிர்க்க வேண்டும்.

முடிந்தவரை அனைவரும் வீட்டிலிருந்த படியே அனைத்து வேலைகளையும் செய்ய முயற்சி செய்யுங்கள். மிகவும் அவசியம் என கருதினால் மட்டும் வீட்டை விட்டு வெளியில் செல்லுங்கள். குறிப்பாக, 65 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் அடுத்த சில வாரங்களுக்கு வீட்டை விட்டு வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

கரோனா வைரஸிலிருந்து தப்பிக்க வேண்டுமானால் உங்களுடைய சில மணி நேரங்களை, சில வாரங்களை தியாகம் செய்துதான் ஆக வேண்டும்.

வரும் ஞாயிற்றுக்கிழமை மக்களால், மக் களுக்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது போல கருதிக் கொள்ளுங்கள். அன்றைய தினம் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியில் செல்லாதீர்கள். இது இந்த வைரஸிலிருந்து நாட்டை பாதுகாப்பதற்கான முயற்சியின் சோதனையாக அமையும்.

காவல், மருத்துவம், ஊடகம் உள்ளிட்ட அத்தியாவசிய பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் மட்டும் வெளியில் செல்லுங்கள்.

இதுகுறித்து மாநில அரசுகள், என்எஸ்எஸ், ஸ்கவுட் உள்ளிட்ட தன்னார்வ அமைப்புகள் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண் டும். பொதுமக்களும் தங்களுக்கு தெரிந்த 10 பேருக்கு இதுகுறித்த தகவலை தெரிவியுங்கள்.

இந்த ஒரு நாள் நடவடிக்கை, அடுத்த சில வாரங்களுக்கு சமூகத்திலிருந்து விலகி இருப்பதற்கான புதிய கட்டுப்பாட்டை வகுத்துக்கொள்ள நமக்கு உதவிகரமாக இருக்கும். குறிப்பாக, இந்த வைரஸை எதிர்கொள்ள நாம் எவ்வாறு தயாராக இருக்கிறோம் என்பதை இந்த உலகத்துக்கு காட்ட முடியும்.

நன்றி தெரிவியுங்கள்

கடந்த 2 மாதங்களாக கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைவதற்காக மருத்துவர்கள், நர்ஸ்கள், தூய்மை பணி யாளர்கள் உட்பட அனைவரும் இரவு பகல் பாராமல் ஓய்வின்றி பணியாற்றி வரு கிறார்கள்.

அவர்கள் அனைவருக்கும் வரும் 22-ம் தேதி மாலை 5 மணிக்கு நாம் நன்றி தெரிவிக்க வேண்டும். இதற்காக, அனைவரும் தங்கள் வீட்டு வாசலிலோ பால்கனியிலோ நின்றபடி சுமார் 5 நிமிடங்களுக்கு கைதட்டியும் மணியோசை எழுப்பியும் அவர்களை ஊக்கப்படுத்துங்கள்.

இதுபோன்ற இக்கட்டான தருணத்தில், மருத்துவ பணியாளர்களுக்கு அழுத்தம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். வழக்க மான மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவ மனைக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். மிகவும் அவசியம் எனக் கருதினால் மட்டும் உங்கள் மருத்துவருடன் தொலை பேசியில் ஆலோசனை கேளுங்கள். அறுவை சிகிச்சைக்காக முன்கூட்டியே திட்டமிட்டி ருந்தாலும் முடிந்தவரை தள்ளி வைக்க முயற்சி செய்யவும்.

கரோனா வைரஸ் பொருளாதார வளர்ச்சி யையும் கடுமையாக பாதித்துள்ளது. குறிப் பாக ஏழை, நடுத்தர மக்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பொருளாதார சவால்களை கருத்தில்கொண்டு, கோவிட்-19 பொருளாதார துயர் தணிப்பு செயல்பாட்டுக் குழுவை உருவாக்க அரசு முடிவு செய் துள்ளது. இக்குழு அனைத்து தரப்பினரின் கருத்தை கேட்டு அதற்கேற்ப நடவடிக்கையை எடுக்கும்.

இதுபோன்ற இக்கட்டான தருணத்தில், சிறிய மற்றும் பெரிய நிறுவனங்கள் பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். பணிக்கு வரவில்லை என்பதற்காக அவர்களுடைய ஊதியத்தை குறைக்காதீர்கள்.

உணவுப் பொருட்களை பதுக்காதீர்கள்

பால், உணவுப்பொருட்கள், மருந்து உட்பட அனைத்து அத்தியாவசிய பொருட் களும் போதுமான அளவில் கையிருப்பு உள்ளது. இவை எப்போதும் தாராளமாக கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்து வரு கிறது. எனவே, பதற்றமடைந்து தேவைக்கு அதிகமான பொருட்களை வாங்கி பதுக்க வேண்டாம்.

வரும் நாட்களில் அனைவரும் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்படுவார்கள் என்று நம்புகிறேன். இந்த வைரஸ் அச் சுறுத்தலில் இருந்து நம்மையும், நாட்டு மக்களையும் பாதுகாக்க ஒவ்வொருவரும் பங்காற்ற வேண்டும்.

நாட்டு மக்கள் அனைவரும் சுய ஊரடங்கை பின்பற்ற வேண்டும் என்று மீண்டும் ஒரு முறை கேட்டுக் கொள்கிறேன். நாட்டு மக்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நன்றி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment