கூட்டுறவு வங்கிகளில் உதவியாளர் காலிப் பணியிட எண்ணிக்கை உயர்வு மார்ச் 22, 29-ம் தேதிகளில் தேர்வு

கூட்டுறவு வங்கிகளில் உதவியாளர், இளநிலை உதவியாளர் காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை உயர்ந் துள்ளதால் அவற்றுக்கும் சேர்த்து தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கூட்டுறவுத் துறை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத் தலைவர் கோ.செந்தில்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கூட்டுறவு வங்கிகள், கடன் சங்கங்கள், பணியாளர் கூட்டுறவு கடன் சங்கங்கள், திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கம் மற்றும் சென்னை மத்திய கூட்டுறவு அச்சகம் ஆகிய கூட்டுறவு நிறுவனங்களில் உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் நிலையில் இருந்த 117 பணியிடங்களை நிரப்ப கடந்த ஜனவரி 30-ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் தற்போது காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 117-ல் இருந்து 125 ஆக உயர்ந்துள்ளது. எனவே, வரும் 22-ம் தேதி 125 பணியிடங்களுக்கும் எழுத்துத் தேர்வு நடைபெறும்.

அதேபோல் சென்னை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் உதவியாளர் பதவிகளில் இருந்த 203 காலிப் பணியிடங்கள் தற்போது 286 ஆக உயர்ந்துள்ளன.

இதற்கு மார்ச் 29-ம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தப்படும். அதிகரித்துள்ள பணியிட விவரங்கள் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய இணையதளமான http://www.chndrb.in-ல் வெளியிடப் பட்டுள்ளது.கூட்டுறவு நிறுவனங்களில் உதவி யாளர், இளநிலை உதவியாளர் 117 காலிப் பணியிடங்கள் 125 ஆக உயர்ந்துள்ளது.

No comments:

Post a Comment