பள்ளிகளுக்கு ஏப்ரல் 21 முதல் விடுமுறை...

பள்ளி மாணவர்களுக்கான கோடை விடுமுறை ஏப்.21-ம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழக பள்ளிக்கல்வியின் கீழ் 37,358 அரசுப் பள்ளிகள் மற்றும் 8,423 அரசு உதவி பெறும் பள்ளிகள் இயங்குகின்றன. இவற்றில் சுமார் 68 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இதில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. மார்ச் 2 தொடங்கி நடைபெற்று வரும் பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 9-ம் தேதியு டன் நிறைவடைகின்றன. இதுதவிர 1 முதல் 9-ம் வகுப்புகளுக் கான முழு ஆண்டு மற்றும் இறுதி பருவத் தேர்வுகள் ஏப்ரல் 1 முதல் 20-ம் தேதி வரை மாவட்ட அளவில் நடத்தப்பட உள்ளன.

இதையடுத்து அனைத்து வகை அரசு மற்றும் அரசு உதவி பள்ளி களில் நடப்பு கல்வியாண்டுக்கான வேலை நாட்கள் ஏப்.20-ம் தேதி யுடன் முடிகின்றன. தொடர்ந்து ஏப்.21-ம் தேதி முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்படுகிறது. விடுமுறை முடிந்து மீண்டும் ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அதனால் பாடங்களை விரைவாக நடத்தி, பருவத் தேர்வுகளை உரிய நேரத்துக் குள் முடிக்க பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment