வரும் மார்ச் 20-ம் தேதி முதல் தட்டச்சர் பணிக்கான கலந்தாய்வு டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு: குரூப் 4 பணிகளுக்கான எழுத்துத் தேர்வு கடந்தாண்டு செப்டம்பர் 1-ம் தேதி நடைபெற்றது.இதன் முடிவுகள் நவம் பர் 12-ம்தேதி வெளியிடப்பட்டது. இதில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பணி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.

அதன்படி தட்டச்சர் பணிக்கு மார்ச் 20 முதல் 31-ம் தேதி வரையும், சுருக் கெழுத்து தட்டச்சர் பணிக்கு ஏப்ரல் 2 முதல் 7-ம் தேதி வரையும் கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது.

இதற்கு தேர்வானவர்களின் விவரங் கள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள் ளது. இதையடுத்து தேர்ச்சி பெற்றவர் கள் கலந்தாய்வுக்கான அழைப்பாணை கடிதத்தை டிஎன்பிஎஸ்சி தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

மேலும், குறிப்பிட்ட நாளில் சென்னை யில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடைபெறும் கலந்தாய்வில் தேர்வர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும். கலந்தாய் வில் பங்கேற்க தவறினால் மறுவாய்ப்பு அளிக்கப்படாது. கூடுதல் விவரங்களை இணையதளத்தில் அறியலாம்.

No comments:

Post a Comment