பிளஸ் 2 ஆங்கில வினாத்தாள் கடினம் மாணவர்கள், ஆசிரியர்கள் கருத்து

  • பிளஸ் 2 தேர்வில் ஆங்கில வினாத்தாள் கடினமாக இருந்ததாக மாணவர்களும் ஆசிரியர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். 
  • தமிழக பள்ளிக்கல்வியின் பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கியது. முதல் நாள் நடைபெற்ற மொழிப்பாடத் தேர்வு எளிதாக இருந்தது. 
  • அதைத் தொடர்ந்து ஆங்கில பாடத்துக் கான தேர்வு நேற்று நடை பெற்றது. மாநிலம் முழுவதும் அமைக்கப் பட்டிருந்த 3,012 மையங்களில் 8.35 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். 
  • மொத்தம் 90 மதிப் பெண்களுக்கு நடைபெற்ற தேர்வு கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். 
  • இதுகுறித்து ஆங்கில பாட ஆசிரியர் அமுதவல்லி கூறும் போது, ‘‘காலாண்டு, அரை யாண்டுத் தேர்வுகளில் வழங்கப் பட்ட வினாத்தாளை முன்மாதிரி யாக வைத்துதான் பொதுத்தேர் வுக்கு மாணவர்களை தயார் செய் தோம். 
  • அதற்கு மாறாக பொதுத் தேர்வு வினாத்தாள் அமைந் திருந்தது. மாணவர்களுக்கு சிரமம் ஒரு மதிப்பெண் வினாக்களில் 5 கேள்விகளும், கடிதம் எழுது தல் மற்றும் துணைப்பாட பகுதி யில் இருந்து கேட்கப்பட்ட கேள்வி களும் மறைமுக வடிவில் இருந்தன. 
  • வழக்கமாக பாடல் பகுதியில் கேட்கப்படும் வினாக் கள் எளிதாகவே இருக்கும். ஆனால், இம்முறை பாடல் பகுதி யில் இடம்பெற்ற கேள்விகளை புரிந்து கொள்ளவே மாணவர்கள் சிரமப்பட்டனர். தமிழ்வழி படித்த மாணவர்களுக்கு இந்த தேர்வு மிகவும் கடினமாக இருந்திருக் கும்’’என்றார். 
  •  இதற்கிடையே 11-ம் வகுப்புக் கான ஆங்கிலப் பாடத்தேர்வு இன்று (மார்ச் 6) நடைபெற உள்ளது. 
  • இந்த தேர்வை மாநிலம் முழு வதும் அமைக்கப்பட்டுள்ள 3,012 தேர்வு மையங்களில் 8.32 லட் சம் மாணவர்கள் எழுதவுள்ள னர். 
  • இதைத் தொடர்ந்து கணிதம், விலங்கியல், வணிகவியல் உள் ளிட்ட பாடங்களுக்கான தேர்வு மார்ச் 9-ம் தேதி முதல் நடைபெற உள்ளன.

No comments:

Post a Comment