குரூப் 1 தேர்வு ஒத்திவைப்பு - தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் , 20 . 01 . 2020 நாளிட்ட அறிவிக்கை எண் 0112020 ல் தொகுதி 1 பணிகளில் உள்ள பல்வேறு பதவிகளுக்கான முதனிலைத் தேர்வு 05 . 04 . 2020 அன்று நடைபெறும் என்று அறிவித்திருந்தது . |

சென்னை மற்றும் இதர மாவட்டங்களில் தங்கும் விடுதிகள் கொரோனா வைரஸ் நோய் தொற்றின் காரணமாக மூடப்பட்டு வருவதாகவும் அவர்கள் தங்குவதற்கு மாற்று ஏற்பாடு இல்லாத காரணத்தால் அவர்கள் சொந்த ஊருக்கு செல்ல வேண்டியது இருப்பதாக தேர்வர்கள் தெரிவித்துள்ளனர் மேலும் தேர்வர்கள் மேற்படி தேர்வுக்கு பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலங்களிலிருந்து தேர்வு மையங்களுக்கு பயணிக்க வேண்டிய சூழ்நிலையில் அவர்கள் நோய் தொற்றுக்கு உள்ளாகக்கூடும் என தெரிவித்து மேற்படி தொகுதி 1 தேர்வினை தள்ளி வைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் , மத்திய அரசு , கொரோனா வைரஸ் நோய் தொற்றை ஒரு தேசிய பேரிடராக அறிவிக்கை செய்துள்ளதாலும் , தமிழக அரசு கொரோனா வைரஸ் பரவலை தடுக்க எடுத்துவரும் பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளையும் , தேர்வர்களின் கோரிக்கைகளையும் கருத்திற்கொண்டு 05 . 04 . 2020 அன்று நடைபெறுவதாக அறிவித்திருந்த தொகுதி 1 க்கான முதனிலைத் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது . இத்தேர்வுகள் நடைபெறும் மாற்று தேதியானது விரைவில் அறிவிக்கப்படும் .

 செயலாளர்

No comments:

Post a Comment