`பிளஸ் 1 கணித பாடத்தேர்வு கடினம்’ 

பிளஸ் 1 கணித பாடத்தேர்வு வினாத்தாள் கடினமாக இருந்த தாக மாணவர்கள் தெரிவித்தனர்.

தமிழக பள்ளிக்கல்வியின் பாடத்திட்டத்தில் பிளஸ் 1 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 4-ம் தேதி தொடங்கி நடைபெற்று வரு கிறது. தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடத்தேர்வுகள் முடிந்த நிலை யில் கணிதம், வணிகவியல் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் நேற்று நடைபெற்றன. இந்த தேர்வை மாநிலம் முழு வதும் அமைக்கப்பட்டிருந்த 3,016 மையங்களில் 8.2 லட்சம் மாண வர்கள் எழுதினர். இத்தேர்வில் 5 மதிப்பெண் பகுதியை தவிர்த்து 1, 2 மற்றும் 3 மதிப்பெண் கேள் விகள் கடினமாக கேட்கப்பட் டதாக மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதேபோல், விலங்கியல் மற்றும் நுண்ணுயிரியல் வினாத் தாள்களும் கடினமாக இருந்துள் ளன. அதேநேரம் வணிகவியல், உள்ளிட்ட இதர பாடத்தேர்வுகள் எளிதாக அமைந்ததாக ஆசிரியர் கள் தெரிவித்தனர். இதையடுத்து கணினி அறிவியல், உயிரி வேதி யியல், மனை அறிவியல், அர சியல் அறிவியல் பாடத் தேர்வுகள் நாளை நடைபெற உள்ளன.

No comments:

Post a Comment