தமிழகத்தில் பள்ளி மாணவ, மாணவியருக்கு கோவிட்-19 வைரஸ் அறிகுறி இல்லை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

தமிழகத்தில் பள்ளி மாணவ, மாணவியருக்கு கோவிட்-19 வைரஸ் பாதிப்பு அறிகுறிகள் இல்லை என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ராஜவேலு என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘கோவிட்-19 வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது. இதன் தாக்கத்தில் இருந்து பொது மக்களை காக்க வேண்டிய கடமை மத்திய, மாநில அரசுகளுக்கு உள்ளது.

ஆனால் பள்ளி செல்லும் மாணவ, மாணவியர் அரசு அதிகாரி களின் அறிவுறுத்தல்களையோ அல்லது விழிப்புணர்வு பிரசாரங் களையோ பின்பற்ற வாய்ப்பு குறைவு. இதன் தாக்கத்தைக் கட்டுப் படுத்த முடியாமல் பல வெளிநாடு களிலும், தாக்கத்தைக் குறைக்க அண்டை மாநிலங்களில் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக் கப்பட்டுள்ளது. எனவே கோடை விடுமுறை நெருங்கவுள்ள நிலை யில், தமிழகத்திலும் முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக மாணவ, மாணவியர் மற்றும் குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க உத்தரவிட வேண்டும்.

2019-20 கல்வியாண்டு நிறைவடையும் தருவாயில் உள்ள தால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாது. எனவே கோவிட்-19 வைரஸ் பரவாமல் தடுக்க பள்ளி களுக்கு உடனடியாக விடுமுறை அளிக்க உத்தரவிட வேண்டும், என அதில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான அரசு தலைமை ப்ளீடர் வி.ஜெயப் பிரகாஷ் நாராயணன், ‘‘ தமிழகத் தில் கோவிட்-19 வைரஸ் பரவாமல் தடுக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை களும் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு இந்த வைர ஸால் எந்த பாதிப்பும் ஏற்பட வில்லை. வெளிநாட்டில் இருந்து திரும்பிய ஒரே ஒரு நபருக்கு மட்டுமே இந்த வைரஸ் பாதிப்பு இருந்தது. அவரும் தற்போது முழுமையாக குணமடைந்து உள்ளார்.

ஆனால் கேரளாவில் நிலைமை வேறு என்பதால் அங்கு பள்ளி களுக்கு விடுமுறை அளிக்கப் பட்டுள்ளது. இருந்தபோதும் இந்த கொடுமையான வைரஸ் தாக்கு தலில் இருந்து தப்பிக்க பள்ளி மாணவர்களுக்கும் தேவை யான விழிப்புணர்வு நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டு வரு கிறது, என்றார்.

அதையடுத்து நீதிபதிகள், ‘‘இந்த வழக்கு போதுமான விவரங் களுடன் தாக்கல் செய்யப்பட வில்லை. யாருக்கு பாதிப்பு ஏற்பட்டு ள்ளது என்பதும் தெரிவிக்க வில்லை. எனவே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க உத்தரவிட முடியாது. இருந்தபோதும் மாணவ, மாணவியர் உள்ளிட்ட யாருக்கும் இந்த வைரஸ் பரவாமல் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு அதி காரிகள் தொய்வின்றி எடுக்க வேண்டும் என அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தனர்.

No comments:

Post a Comment