அரசுப் பள்ளி மாணவர்கள் 100 பேருக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கும் அமைச்சர் செங்கோட்டையன் நம்பிக்கை


நடப்பு ஆண்டில் 100 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அரசு மருத் துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

இதுகுறித்து சட்டப்பேரவை யில் நேற்று நடைபெற்ற விவாதத் தில் பதிலளித்து அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:

தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் நீட் நுழைவுத் தேர் வுக்கு லட்சக்கணக்கில் பணம் செலுத்தி பிரத்யேக பயிற்சி பெறு கின்றனர். ஆனால், நம் அரசுப் பள்ளி மாணவர்கள் பொதுத்தேர் வுடன் சேர்த்து தான் நீட் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.

தற்போதைய பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டத்தை முழுமையாக படித்தாலே மத்திய அரசின் எந்த ஒரு பொதுத்தேர்விலும் மாணவர்கள் எளிதாக தேர்ச்சி பெற முடியும். இதுதவிர நடப்பு ஆண்டு இலவச நீட் பயிற்சிக்காக 7,500 மாணவர்களை தேர்வு செய்துள்ளோம்.

இதன்மூலம் இந்த ஆண்டு குறைந்தது 100 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அரசு மருத் துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கும்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

No comments:

Post a Comment