பிளஸ் 1 மொழிப்பாடத் தேர்வு எளிதாக இருந்ததாக மாணவர்கள் மகிழ்ச்சி

பிளஸ் 1 மொழிப்பாடத்தேர்வு எளிதாக இருந்ததாக மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 1-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அதைத்தொடர்ந்து பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. முதல்நாளில் தமிழ் பாடத் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 3,016 மையங்களில் 8.32 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். மொத்தம் 90 மதிப்பெண்களுக்கு நடைபெற்ற இத் தேர்வில் ஒரு மதிப்பெண் வினாக்கள் தவிர மற்ற பகுதிகள் எளிதாக இருந்தன. சராசரி மாணவர்கள்கூட நல்ல மதிப்பெண் பெற முடியும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர். ஆங்கிலப் பாடத்தேர்வு நாளை (மார்ச் 6) நடைபெற உள்ளது.

No comments:

Post a Comment