ராணுவ கல்லூரியில் சேர்க்கைக்கு ஜூன் 1, 2-ம் தேதிகளில் நுழைவுத்தேர்வு மார்ச் 31-க்குள் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

  • ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் மாணவர் சேர்க் கைக்கான நுழைவுத்தேர்வு ஜூன் 1, 2-ம் தேதிகளில் நடத்தப்பட உள்ளது. இதற்கு மார்ச் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என டிஎன்பிஎஸ்சி அறி வித்துள்ளது. 
  • உத்ராகண்ட் மாநிலம் டேரா டூனில் அமைந்துள்ள இந்திய ராணுவக் கல்லூரியில் 2020-ம் ஆண்டு ஜனவரி பருவத்தில் மாணவர் சேர்க்கைக்கான நுழை வுத்தேர்வு ஜுன் 1, 2-ம் தேதிகளில் நடத்தப்பட உள்ளது. 
  • சென்னை உட்பட நாட்டின் முக்கிய நகரங்களில் இத்தேர்வு நடைபெறும். இது, எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு என இரண்டு தேர்வுகளைக் கொண்டது. 
  • எழுத்துத் தேர்வில் ஆங்கிலம், கணக்கு, பொது அறிவு ஆகிய தாள்கள் இடம்பெறும். எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு தேர்வு செய்யப்படுவர். 
  • நேர்முகத் தேர்வு அக்.6-ம் தேதி நடைபெறும்.ராணுவக் கல்லூரியில் சேர 1.1.2021 அன்று அங்கீகரிக்கப் பட்ட பள்ளியில் 7-ம் வகுப்பு படித் துக் கொண்டிருப்பவராகவோ அல்லது 7-ம் வகுப்பு முடித்த வராகவோ இருக்க வேண்டும். குறைந்தபட்சம் பதினொன்றரை வயதுக்கு குறையாமலும் 13 வயது பூர்த்தி அடையாதவராகவும் இருத்தல் வேண்டும். 
  • நுழைவுத் தேர்வுக்கான விண் ணப்பப் படிவம், தகவல் தொகுப் பேடு, முந்தைய ஆண்டு தேர்வு வினாத்தாள் தொகுப்பு ஆகியவற் றைப் பெற ‘கமாண்டென்ட், ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரி, டேராடூன், உத்ராகண்ட் - 248 003’ என்ற முகவரிக்கு ரூ.600-க்கான டிமாண்ட் டிராப்டை (எஸ்சி, எஸ்டி வகுப்பினர் எனில் ரூ.555) கோரிக்கை கடிதத்துடன் விரைவு தபால் மூலம் அனுப்ப வேண்டும். 
  •  டிமாண்ட் டிராப்ட் ‘கமாண் டென்ட், ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரி, டேராடூன்’ என்ற பெயரில் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் வாயிலாகவும் (www.rimc.gov.in) செலுத்தலாம். டிஎன்பிஎஸ்சி அலுவல கத்தில் விண்ணப்பம் ஏதும் வழங் கப்படாது. 
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை ‘தேர்வு கட்டுப் பாட்டு அலுவலர், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், பூங்காநகர், சென்னை 600 003’ என்ற முகவரிக்கு மார்ச் 31-ம் தேதி மாலை 5.45-க்குள் அனுப்ப வேண்டும். 
  • கூடுதல் விவரங்களை www.rimc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. 
  • இந்த நுழைவுத்தேர்வு தொடர் பாக பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி களுக்கும் தகவல் அனுப்பி உள்ளார்.

No comments:

Post a Comment