TNPSC | ஊகங்களின் அடிப்படையில் தவறான செய்திகளை வெளியிட வேண்டாம் என்றும் அச்செய்திகளை நம்ப வேண்டாம் என்றும் தேர்வாணையம் கோரிக்கை

  • தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் செய்தி வெளியீடு - 09/2020, நாள்:08.02.2020 
  • தேர்வாணையம் அண்மையில் முடிவுகள் வெளியிட்ட தொகுதி - 2 தேர்வில் 1997ஆம் ஆண்டு பிறந்த தேர்வர்கள் அதிகமாகத் தேர்ச்சி பெற்றுள்ளது சந்தேகத்திற்குரியதாக உள்ளது என சமூக மற்றும் செய்தி ஊடகங்களில் செய்திகளாக வெளிவந்துள்ளது. 
  • இந்த ஐயங்கள் தொடர்பாக தேர்வாணையம் முழுவதுமாக ஆய்வு செய்ததன் அடிப்படையில் தவறு ஏதும் நடைபெறவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. 
  • ஏற்கனவே தேர்வாணையம் அறிவித்துள்ளது போல அடுத்த வாரம் தொகுதி-2 க்கான கலந்தாய்வு நிறைவுபெற்று தேர்வு நடவடிக்கைகள் முழுவதும் முடிவுற்றவுடன் தேர்வர்களின் முழு விவரங்களும் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும். 
  • இதுபோலவே அண்மையில் நடந்து முடிந்த ஒருங்கிணைந்த பொறியாளர் பணிகளுக்கான தேர்வில் இளநிலை கட்டடக் கலைஞர் (Junior Architect) பணிக்கான நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்பட்ட 39 தெரிவர்களில் சென்னை மையத்திலிருந்து மட்டும் 31 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் எனவே இதில் தவறு நிகழ்ந்திருக்கலாம் என்றும் சமூக மற்றும் செய்தி ஊடகங்களில் செய்திகளாக வெளிவந்துள்ளது. 
  • இந்த ஐயங்கள் தொடர்பாகவும் தேர்வாணையம் முழுவதுமாக ஆய்வு செய்துள்ளது. 
  • மேற்குறிப்பிட்ட 31 தேர்வர்களும் மூன்று வெவ்வேறு தேர்வுக்கூடங்களில் 21 வெவ்வேறு அறைகளில் அமர்ந்து தேர்வு எழுதியுள்ளனர். 
  • இத்தேர்வு தொடர்பான அனைத்து ஆவணங்களும் முழுவதுமாக சரிபார்க்கப்பட்டதன் அடிப்படையில் தவறு ஏதும் நடைபெறவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. 
  • இப்பணிகளுக்கான கலந்தாய்வு இன்று நிறைவுற்றுள்ள நிலையில், தேர்வு நடவடிக்கைகள் முழுவதும் முடிவுற்றவுடன் தேர்வர்களின் முழு விவரங்களும் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும். 
  • மேலும் இது போன்ற ஊகங்களின் அடிப்படையிலான செய்திகளால் நல்ல முறையில் தேர்விற்குத் தங்களைத் தயார் செய்து தேர்வில் நேர்மையாக பங்கேற்கும் தேர்வர்களின் திறமையை குறைத்துக் கூறுவது வருத்தத்திற்குரியது. 
  • தேர்வாணையம் இதுபோன்ற உண்மைக்குப் புறம்பான வதந்திகளைப் பரப்புவோர் மீது தனது கண்டனத்தைப் பதிவுசெய்கிறது. 
  • தகுந்த ஆதாரங்களுடன் பெறப்படும் குறிப்பிட்ட புகார்கள் மீது தேர்வாணையம் எப்பொழுதும் உடனடி ஆய்வு செய்து. தவறுகள் நிகழ்ந்திருப்பதற்கான முகாந்திரம் இருப்பின் குற்றவியல் நடவடிக்கை எடுக்க உறுதுணையாக இருந்து வருகிறது. 
  • இனிவருங்காலங்களிலும் தேர்வாணையத்தின் இந்நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இருக்காது. 
  • எனவே ஊகங்களின் அடிப்படையில் தவறான செய்திகளை வெளியிட வேண்டாம் என்றும் அச்செய்திகளை நம்ப வேண்டாம் என்றும் தேர்வாணையம் கேட்டுக் கொள்கிறது.

No comments:

Post a Comment