கற்றது கை மண்ணளவு.. கல்லாதது உலகளவு.. மனதின் குரல் நிகழ்ச்சியில் அவ்வையாரின் வரிகளை மேற்கோள் காட்டி பிரதமர் மோடி உரை

நம் நாட்டின் பல்லுயிர் வளம் மனித இனத்தின் பொக்கிஷம். அதை நாம் பராமரித்து, பாது காக்க வேண்டியது அவசியம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித் துள்ளார். கற்றது கை மண்ணளவு, கல்லாதது உலகளவு என்ற அவ் வையாரின் வரிகளை மேற்கோள் காட்டி பிரதமர் இந்தக் கருத்தை வலியுறுத்தி உள்ளார்.

ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில், அகில இந்திய வானொலியில் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியின் மூலம் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இந் நிகழ்ச்சியில் நேற்று அவர் பேசிய தாவது:

கட்ச் முதல் கோஹிமா வரை, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள அனைவருக்கும் வணக் கம். நமது நாட்டின் பன்முகத்தன்மை பெருமிதம் அளிப்பதாக உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லியின் ஹுனார் ஹட் பகுதியில் உள்ள கைவினைக் கலைஞர்கள் சந்தைக்கு சென்றிருந்தேன். அங்கு நம் நாட்டின் கலாச்சாரம், பாரம்பரியம், பலவகை உணவுப் பழக்க வழக்கங்களை காண முடிந் தது. குறிப்பாக பாரம்பரிய ஆடை கள், கைவினை பொருட்கள், தமிழகத்தின் அழகான ஓவியங்கள் உள்ளிட்ட பலவற்றை பார்க்க முடிந்தது. நீங்களும் ஒரு முறை அந்த சந்தைக்கு சென்று வாருங்கள்.

நம் நாட்டுக்கென சிறந்த பாரம் பரியம் உண்டு. இவை நம் முன்னோர் விட்டுச்சென்ற சொத்தாகும். கற் றல், கற்பித்தல் மூலம் இவை நமக்கு கிடைத்திருக்கின்றன. அனைத்து உயிரினங்கள் மீதும் கருணை காட்டுவது, இயற்கையை நேசிப்பது ஆகியவை நமது கலாச் சாரத்துடன் இணைந்தது ஆகும். நமது விருந்தோம்பல் சூழலைத் தேடி உலகின் பல்வேறு பகுதி களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பறவையினங்கள் இந்தியா வரு கின்றன. புலம்பெயரும் பறவை யினங்களை பாதுகாப்பது தொடர் பான மாநாடு குஜராத் மாநிலத்தில் சமீபத்தில் நடந்தது. இதில் பறவையினங்களை பாதுகாப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

நாட்டின் சிறந்த தமிழ் பெண் புலவரான அவ்வையார், ‘கற்றது கை மண்ணளவு, கல்லாதது உல களவு’ என எழுதி உள்ளார். நம் நாட்டின் பல்லுயிர் வளமும் இது போன்றதுதான். இதுபற்றி நமக்கு தெரிந்தவை சிறிய அளவுதான். தெரியாதவை மிக அதிகம். நமது நாட்டின் பல்லுயிர் வளம் என்பது மனித இனத்துக்கு பொக்கிஷம் போன்றது. அதை நாம் பராமரித்து, பாதுகாக்க வேண்டும். அத்துடன் அதை வளர்த்தெடுக்க வேண்டும்.

அறிவியல் மற்றும் தொழில்நுட் பம் பற்றி தெரிந்துகொள்வதில் நமது நாட்டு குழந்தைகளும் இளைஞர்களும் ஆர்வம் காட்டுவது அதிகரித்து வருகிறது. விண் வெளிக்கு செயற்கைக்கோள்களை அனுப்புவதில் நாம் சாதனை படைத்து வருகிறோம். சந்திரயான் 2 ஏவப்பட்டபோது நான் பெங்க ளூருவில் இருந்தேன். அப் போது அங்கு இருந்த குழந் தைகளின் ஆர்வமிகுதியை கண் கூடாக பார்த்தேன். இளைஞர்களின் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகை யில், ஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட் ஏவப்படும் நிகழ்வை அனைவரும் நேரில் பார்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக 10 ஆயிரம் பேர் அம ரக்கூடிய வகையில் பார்வையாளர் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான இருக்கையை இணைய தளம் மூலம் பதிவு செய்யலாம்.

இஸ்ரோவின் யுவிகா திட்டம் பற்றி இந்த நிகழ்ச்சியில் பேச வேண்டும் என ஜார்க்கண்டின் தன்பாதைச் சேர்ந்த பராஸ் நமோ செயலியில் கேட்டுக்கொண்டார். பள்ளிக் குழந்தைகளுக்காக கடந்த ஆண்டு இளைய விஞ்ஞானி திட்டம் (யுவிகா) தொடங்கப்பட்டது. இதன்படி, ஆண்டு இறுதித் தேர்வு முடிந்ததும் விடுமுறை நாட்களில் மாணவர்கள் இஸ்ரோவின் பல் வேறு மையங்களுக்கு சென்று விண்வெளி தொழில்நுட்பம் பற்றி தெரிந்து கொள்ள முடியும். யுவிகா இணையதளம் மூலம் பதிவு செய்து பயன்பெறலாம்.

கடந்த ஜனவரி 31-ம் தேதி லடாக்கின் லே பகுதியில் உள்ள குஷோக் பகுலா ரிம்போசி விமான நிலையத்திலிருந்து விமானப் படைக்கு சொந்தமான ஏஎன்-32 விமானம் பறந்தது. இதில் 10 சதவீதம் இந்திய தாவர எண்ணெய் அடங்கிய கலப்பு எரிபொருள் பயன்படுத்தப்பட்டது. இது மிகப் பெரிய சாதனை. இந்த முயற்சி காரணமாக கரியமில வாயு வெளி யேற்றம் குறைவதுடன் கச்சா எண்ணெய் இறக்குமதியும் குறைய வாய்ப்பு உள்ளது.

பிஹாரின் பூர்ணியாவைச் சேர்ந்த பெண்கள் மல்பெரி சாகு படி செய்து பட்டுக்கூடு வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் குறைவான வருமானமே கிடைத் தது. இதையடுத்து, பட்டுக்கூடி லிருந்து பட்டு இழை தயார் செய்து, புடவைகளை நெசவு செய்யத் தொடங்கினார்கள். இதனால் அவர் களுடைய வருவாய் அதிகரித் துள்ளது.

நம் நாட்டு பெண்களின் துணிவை நினைத்தால் பெருமிதமாக உள் ளது. குறிப்பாக காம்யா கார்த்தி கேயன் என்ற 12 வயது சிறுமியின் சாதனை பற்றி குறிப்பிட விரும்பு கிறேன். இவர் தென் அமெரிக்காவின் ஆண்டிஸ் மலைத்தொடரில் மிக உயர்ந்த அகான்ககுவா சிகரத்தின் (7,000 மீட்டர் உயரம்) உச்சியை அடைந்து அங்கு இந்திய தேசியக் கொடியை நட்டு சாதனை படைத் துள்ளார். அடுத்ததாக, சாஹாஸ் என்ற திட்டத்தின் கீழ், அனைத்து கண்டங்களிலும் உள்ள உயரமான சிகரங்களில் ஏற திட்டமிட்டுள்ளார். இதற்காக அவருக்கு வாழ்த்துகள்.

நமது வாழ்வில் எதையாவது சாதிக்க வேண்டும் என விரும் பினால், நமக்குள் இருக்கும் மாண வனை எக்காரணம் கொண்டும் சாக விடக் கூடாது. கேரள மாநிலத்தைச் சேர்ந்த 105 வயதான பாகிரதி அம்மாவின் சாதனை இதற்கு உதாரணமாக விளங்குகிறது. இவர் சிறு வயதிலேயே தாயை இழந்தார். சிறு வயதிலேயே இவ ருக்கு திருமணம் நடந்தது. ஆனால் சிறு வயதிலேயே கணவரையும் இழந்தார். ஆனாலும் தனது மன துணிவை கைவிடவில்லை. 10 வய திலேயே பள்ளிப் படிப்பை நிறுத்திய இவர், தனது 105-வது வயதில் படிக்கத் தொடங்கி உள்ளார். இப் போது 4-ம் நிலை தேர்வில் 75 சத வீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். தொடர்ந்து படிக்க விரும்புகிறார். நமக்கு உத்வேகம் தரக்கூடிய அவருக்கு வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment