புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற முடியாது மாநிலங்களவையில் அன்புமணிக்கு மத்திய அரசு பதில்


  • அனைத்து தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளதால் புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 
  • இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமை யிலான குழு தயாரித்த தேசிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கை கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியிடப்பட்டது. 
  • அதில், சம்ஸ்கிருத மொழிக்கு முக்கியத் துவம் தருதல், பல்கலைக்கழக மானியக் குழு போன்ற உயர் அமைப்புகளை கலைத்துவிட்டு தேசிய கல்வி ஆணையம் அமைத் தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. 
  • இதற்கு நாடு முழுதும் கல்வியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் மத்தியில் பரவலாக எதிர்ப்புகள் எழுந்தன. இதையடுத்து அனைத்து தரப்பின் கருத்துகளைக் கேட்டு வரைவு அறிக்கையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது. 
  • இதனால் விவ காரம் அமைதியானது. இதற்கிடையே நடப்பு ஆண்டு மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் கல்வித் துறைக்கு ரூ.99,300 கோடி ஒதுக்கீடு செய்யப் படுவதாகவும், புதிய கல்விக் கொள்கை விரைவில் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட் டுள்ளது. 
  • மேலும், வரைவுக் கொள்கையில் இடம்பெற்ற அம்சங்கள்தான் பெரும்பாலும் நடைமுறைப்படுத்தப்பட உள்ள தாக தகவல்கள் வெளியாகின. 
  • இந்நிலையில் பல்வேறு தரப் பினரும் எதிர்ப்பு தெரிவிப்பதால் புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெறும் திட்டம் மத்திய அரசுக்கு இருக்கிறதா என்று மாநிலங்களவையில் பாமக எம்.பி. அன்புமணி கேள்வி எழுப்பினார். 
  • அதற்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் பதில் அளிக்கும்போது, “புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை. வரைவு அறிக்கை தொடர்பாக 2 லட்சத்துக்கும் அதிகமான கருத்து கள் வந்துள்ளன. 
  • அதன்படி புதிய கல்விக் கொள்கைக்கு அனைத்து தரப்பின ரிடம் இருந்தும் சாதகமான கருத்து களே பெறப்பட்டுள்ளன. தற்போது கல்விக் கொள்கையை இறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 
  • புதிய கல்விக் கொள்கை விரைவில் அமல்படுத் தப்படும்’’ என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment