பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் திடீர் மாற்றம் தமிழக தலைமைச் செயலாளர் உத்தரவு

  • தமிழகத்தில் 5, 8-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்தான நிலையில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவை திடீரென்று இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 
  • தமிழகத்தில் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த அரசு முடிவு செய்திருந்தது. தேர்வுகளை நடத்துவதில் பல்வேறு குழப்பங்கள் நிலவிய நிலையில், 4-ந்தேதியன்று அந்த 2 வகுப்புகளுக்குமான பொதுத்தேர்வை ரத்துசெய்வதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார். 
  • இந்த நிலையில், தமிழக தலைமைச் செயலாளர் கே.சண்முகம் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-தமிழக பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ், கைத்தறி, கைவினை பொருட்கள், ஜவுளிகள் மற்றும் காதித்துறையின் முதன்மைச் செயலாளராக மாற்றப்பட்டார். 
  • போக்குவரத்துத் துறையின் முதன்மைச் செயலாளர் பி.சந்திரமோகன், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகப்பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். 
  • அயல்நாட்டு வேலைவாய்ப்பு கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் தர்மேந்திர பிரதாப் யாதவ், போக்குவரத்துத் துறையின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 
  • இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் எரிசக்தித் துறையின் முதன்மைச் செயலாளர் (முழு கூடுதல் பொறுப்பு) தீரஜ் குமார், பள்ளிக் கல்வித்துறையின் முதன்மைச் செயலாளராக மாற்றம் செய்யப்பட்டார். 
  • இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் முதன்மைச் செயலாளராக முழு கூடுதல் பொறுப்பு வகிப்பார்.
  • கைத்தறி, கைவினை பொருட்கள், ஜவுளிகள் மற்றும் காதித்துறையின் முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த், அயல்நாட்டு வேலைவாய்ப்பு கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராக மாற்றப்பட்டார். 
  • நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் முதன்மைச் செயலாளர் ஏ.கார்த்திக், எரிசக்தித் துறையின் முதன்மைச் செயலாளராக முழு கூடுதல் பொறுப்பு வகிப்பார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment