வரும் கல்வியாண்டு முதல் ஜிப்மரில் நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை

ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் வரும் கல்வியாண்டு முதல் நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படும். தனியாக நுழைவுத் தேர்வு நடக்காது என்று அக்கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் 'நீட்' எனப்படும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. ஆனாலும், தேசிய அளவில் முக்கி யத்துவம் பெற்ற புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லுாரிக்கு மத்திய சுகாதார அமைச்சகத்தால் தனியாக நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடந்து வந்தது.

ஜிப்மரில் மொத்தம் 200 இடங் கள் உள்ளன. அதில், புதுச்சேரிக் கான கல்லூரியில் 150 இடங் களும், காரைக்காலில் உள்ள கல்லூரிக்கு 50 இடங்களும் உள்ளன. ஜிப்மருக்கு தனியாக நுழைவுத் தேர்வை நடத்துவது அரசுக்கு கூடுதல் செலவை ஏற்படுத்துவதாகவும் நடைமுறை சிக்கல்கள் இருப்பதாகவும் கருதி வரும் கல்வியாண்டு முதல் ஜிப்ம ருக்கு நீட் தேர்வு மூலம் மாண வர் சேர்க்கை நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இச்சூழலில் ஜிப்மர் நிர்வாகம் வெளியிட்ட உத்தரவில், வரும் கல்வியாண்டில் ஜிப்மர் தனியாக தேர்வு நடத்தாது. நீட் தேர்வு மூலம் சேர்க்கை நடக்கும். மத்திய சுகாதாரத் துறை மூலம் கிடைத்த உத்தரவின் அடிப்படையில் இம் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தகவல் பெற www.nta.ac.in, ntaneet.nic.in ஆகிய இணையங்களை நாடலாம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

அதே நேரத்தில் புதுச்சேரி மாணவர்கள் சில சந்தேகங்களை எழுப்புகின்றனர். இதுதொடர்பாக அவர்கள் கூறும்போது, “ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் புதுச் சேரி, காரைக்காலில் உள்ள 200 மருத்துவ இடங்களுக்கு பொதுப் பிரிவு, ஓபிசி, எஸ்சி என இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.

தற்போது பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கும் 10 சத இடஒதுக்கீடு தரப்படுவதாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த 10 சதவீத இடஒதுக்கீட்டை ஜிப்மரில் தரும்பட்சத்தில், கூடுதல் இடங்கள் பெற்று கலந்தாய்வு நடத்தலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஜிப்மர் நிர்வாகம் கூடுதல் இடங் கள் பெற்று கலந்தாய்வு நடத்து வார்களா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

மேலும், நீட் தேர்வு அடிப்படை யில் மாணவர்கள் சேர்க்கை நடக் கும்போது, கலந்தாய்வை ஜிப்மர் நிர்வாகம் நடத்துமா?, புதுச்சேரி சென்டாக் நிர்வாகம் நடத்துமா? அல்லது மத்திய அரசின் தேசிய மருத்துவ கழகம் நடத்துமா? என் பதை தெளிவுபடுத்த வேண்டும்” என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஜிப்மர் வட்டாரங்களில் இது பற்றி விசாரித்தபோது, “தேர்வு முறை மட்டுமே மாற்றப்படுவதாக தகவல் வந்துள்ளது. இதர விவரங் கள் அடுத்தக் கட்டமாக வெளி யாகும் என எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவித்தனர்.

உயர் அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, “மாணவர் சேர்க்கையின் இடஒதுக்கீட்டில் ஏதும் மாற்றப்படவில்லை. நுழை வுத் தேர்வை தவிர்த்து இதர விஷ யங்களில் பழைய முறையே தொடர வாய்ப்புள்ளது” என்று கூறினர்.

No comments:

Post a Comment