ஓய்வுபெறும் தலைமை ஆசிரியர்கள் விவரங்களை அனுப்ப உத்தரவு

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாகவுள்ள தலைமை ஆசிரியர் பணியிட விவரங்களை அனுப்பி வைக்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் “அரசு மேல்நிலைப்பள்ளி களில் வரும் ஜூன் மாத நிலவரப்படி காலியாக உள்ள தலைமையாசிரியர் பணியிட விவரங்களை கவனமாக தயார் செய்து w1sec.tndse@ nic.in என்ற மின் னஞ்சல் முகவரிக்கு அனைத்து மாவட்ட முதன் மைக் கல்வி அதிகாரிகளும் அனுப்பி வைக்க வேண்டும். எந்தவொரு காலிப்பணியிட விவரத்தையும் எக்காரணம் கொண்டும் மறைக்கக்கூடாது’’ என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment