கூட்டுறவு சங்க பணியிடங்களுக்கு சென்னையில் மட்டுமே தேர்வு பதிவாளர் கோவிந்தராஜ் அறிவிப்பு

கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளர், இளநிலை உதவியாளர் பணியிடங் களுக்கு சென்னையில் மட்டுமே தேர்வு நடைபெறும் என அதன் பதிவாளர் கு.கோவிந்தராஜ் அறி வித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளி யிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது:

கூட்டுறவு சங்கங்களின் பதி வாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் தலைமை கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளர், இளநிலை உதவி யாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப, வரும் மார்ச் 1-ம் தேதி தேர்வு நடைபெறு கிறது. இந்த தேர்வு சென்னை, திருச்சி, சேலம், கோவை, மதுரை, நெல்லை ஆகிய 6 மாவட்ட தேர்வு மையங்களில் நடைபெறும் என கடந்த ஜன.11-ம் தேதி மாநில ஆள்சேர்ப்பு நிலையத்தால் அறி விக்கப்பட்டிருந்தது.

தற்போது, இந்த எழுத்துத் தேர்வை நிர்வாக காரணங்களால் சென்னையில் மட்டுமே நடத்த மாநில ஆள்சேர்ப்பு நிலையம் முடிவெடுத்துள்ளது.

இத்தேர்வுக்கு சென்னை நீங்கலான இதர தேர்வு மையங்களைத் தேர்வு செய்துள்ள விண்ணப்பதாரர்களுக்கு மின்னஞ் சல் மற்றும் குறுஞ்செய்தி வாயிலாக இதுகுறித்து தெரிவிக்கப்படும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment