ஆசிரியர்கள் பணி ஓய்வு விவகாரம் நிலுவை புகாரை ஆய்வு செய்ய பள்ளிக்கல்வித் துறை உத்தரவு


  • ஆசிரியர்கள் ஓய்வுபெறும்போது அவர்கள் மீது நிலுவையில் உள்ள ஒழுங்கு நடவடிக்கைகள் தொடர் பான விவரங்களை சரிபார்த்து அனுமதி அளிக்க கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. 
  • இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநரகம் அனுப்பிய சுற்ற றிக்கை: நடப்பு கல்வி ஆண்டு இறுதி யில் கணிசமான ஆசிரியர்கள் ஓய்வுபெற உள்ளனர். 
  • இதை யடுத்து தமிழ்நாடு குடிமைப் பணி கள் விதிகளின்கீழ் ஒழுங்கு நடவ டிக்கை மேற்கொள்ளப்பட்ட அல் லது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு புகார் நிலுவையில் உள்ள அதி காரிகள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை ஓய்வுபெற அனு மதிக்கும்போது அவர்கள் மீது நிலுவையிலுள்ள விசாரணை அறிக்கையின் நிலையை ஆராய்ந்து அனுமதிக்க வேண்டும். 
  • இதில் எவ்வித தவறுகளும் நடைபெறாத வண்ணம் கூடுதல் கவனம் செலுத்தி முதன்மைக் கல்வி அதிகாரிகள் செயல்பட வேண்டும்.

No comments:

Post a Comment