வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க முடிவு

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் பெயரை நீக்கவும், கள்ள ஓட்டுக்களை தடுக்க வும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 2015-ம் ஆண்டு வாக்காளர் அடையாள அட்டை யுடன் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. 32 கோடி எண்கள் இணைக்கப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்ற கட்டுப்பாடுகள் காரணமாக அந்தப் பணி நிறுத் தப்பட்டது. பின்னர், கடந்த ஆண்டு ஆதார் சட்டத்தில் திருத்தம் செய்து ஆதார் எண்களை சேகரிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, வாக்காளர் அடையாள அட்டை - ஆதார் எண் இணைப்பு தொடர்பாக மத்திய சட்ட அமைச்சகத்துக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியது.

இதை சட்டத்துறை அமைச்சகம் கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டது.இதுதொடர்பாக அமைச்சரவையின் ஒப்புதல் பெறுவதற்காக குறிப்பு அனுப்ப நடவடிக்கைகளை சட்டத்துறை அமைச்சகம் மேற்கொண்டுள்ளது. அதற்கான பணிகள் இறுதிவடிவம் பெற்றுள்ளன. இதன்படி வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கவும் அதற்கான அதி காரத்தை தேர்தல் ஆணையத்துக்கு வழங்க வும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. டெல்லியில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் மற்றும் சட்ட அமைச்சக அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் நடந் தது. அதில் இது தொடர்பாக தேர்தல் ஆணை யத்திடம் மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.

இக்கூட்டத்தில் தலைமை தேர்தல் ஆணை யர் சுனில் அரோரா கூறுகையில், 2004-05 காலகட்டத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்த 40 சீர்திருத்தங்களை விரைவில் அமல்படுத்த வேண்டும் என்றும் இது தொடர்பான ஆலோ சனைக் கூட்டங்கள் நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதை ஏற்றுக் கொண்ட சட்டத் துறை செயலாளர் தேர்தல் ஆணையம் தெரி வித்த சீர்திருத்தங்களை ஆய்வு செய்து வரு வதாகவும் பல கட்டங்களில் விவாதம் நடப்ப தாகவும் அவற்றை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

No comments:

Post a Comment