வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வுகளுக்கு தொலைதூரத்தில் மையங்கள் அமைத்தது ஏன்? ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம்

  • 2018-19-ம் ஆண்டுக்கான வட்டார கல்வி அலுவலர் பணிகளில் காலியாக உள்ள 97 இடங்களுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. இதற்கான கணினி வழித் தேர்வு இன்று(வெள்ளிக்கிழமை) முதல் 16-ந்தேதி (நாளை மறுதினம்) வரை நடைபெற இருக்கிறது. 
  • 57 மையங்களில் இந்த தேர்வு நடக்கிறது. இதற்காக விண்ணப்பித்தவர்களுக்கு தேர்வு மையங்கள் தாங்கள் தேர்வு செய்திருந்த விருப்ப இடங்களை தவிர்த்து தொலைதூரத்தில் மையங்கள் அமைக்கப்பட்டு இருப்பதாக புகார் எழுந்தது. 
  • அதிலும் ஆண் தேர்வர்களுக்குதான் இப்படி தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. 
  • இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:- முறைகேடுகள் நடைபெறுவதைத் தவிர்க்கும் வகையிலும், வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்ற வகையிலும் வெளிமாவட்டங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப் பட்டுள்ளன. 
  • டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடுகளை போல், ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வுகளிலும் முறைகேடுகள் நடக்கக்கூடாது என்பதில் ஆசிரியர் தேர்வு வாரியம் உறுதியாக இருக்கிறது. 
  • தேர்வர்களுக்கு மட்டுமல்லாது தேர்வு பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கும் வெவ்வேறு இடங்களில் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. 
  • இதில் பெண் தேர்வர்களுக்கு மட்டும் அவரவர் விருப்ப பட்டியலை பொறுத்து மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

1 comment:

  1. KSJ Academy, Namakkal

    KSJ Academy offers ONLINE TEST SERIES for POLYTECHNIC TRB in ENGLISH, PHYSICS, CHEMISTRY and MATHS.

    Kindly register in the link given below for FREE demo test.

    https://ksjacademy.com

    Online Test Schedule for English, Physics, Chemistry and Maths

    Unit Test 1 - 31.01.20
    Unit Test 2 - 04.02.20
    Unit Test 3 - 08.02.20
    Unit Test 4 - 12.02.20
    Unit Test 5 - 16.02.20
    Unit Test 6 - 20.02.20
    Unit Test 7 - 24.02.20
    Unit Test 8 - 28.02.20
    Unit Test 9 - 03.03.20
    Unit Test 10 - 07.03.20

    Revision Test 1 - 13.03.20
    Revision Test 2 - 19.03.20

    Full Test 1 - 27.03.20
    Full Test 2 - 04.04.20
    Full Test 3 - 12.04.20

    "ENGLISH STUDY MATERIALS AVAILABLE"

    Contact for Enquiry
    Dr Karthisuresh M.A., Ph. D
    9842230685 / 9944488077

    ReplyDelete