ஏப்ரலுக்கு முன்பு சேர்க்கை நடத்தும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை

  • தனியார் பள்ளிகள் ஏப்ரல் மாதத் துக்கு முன்பு மாணவர் சேர்க்கை நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எச்சரித் துள்ளார். 
  • இளம்வயது மாணவர்களின் உடல் நலம் பேணுதல் குறித்த கருத்தரங்கம் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நேற்று நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், பின்னர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: அனைத்து வகை பள்ளிகளும் வரும் கல்வி ஆண்டுக்கான மாண வர் சேர்க்கையை ஏப்ரலில் தொடங்க வேண்டும் என ஏற் கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
  • தனியார் பள்ளிகள் ஏப்ரல் மாதத்துக்கு முன்பே விளம்பரங் களை செய்து மாணவர் சேர்க் கையை நடத்தக் கூடாது. இதை மீறி மாணவர் சேர்க்கையை நடத் தினால் கடும் நடவடிக்கை எடுக் கப்படும். 
  • மேலும், நன்கொடை வசூலிக் கப்படுவது குறித்து ஆதாரத்துடன் புகார் தெரிவித்தாலும் சம்பந் தப்பட்ட பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் பயிற்சி மையங்களின் செயல்பாடுகள் அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. 
  • தற்போது முறையான அங்கீகாரம் பெற்றவர்கள் மட்டுமே பயிற்சி மையங்களை நடத்த முடியும். 
  •  மாணவர்கள் இடைநிற்றல் குறித்து மத்திய அரசு வெளியிட் டுள்ள புள்ளி விவரங்களை பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். 
  • அந்த ஆய்வறிக்கையின்படி இந்த விவகாரத்தில் முடிவெடுக்கப் படும். மேலும், புதிய பாடதிட்டத்தில் தயாரிக்கப்பட்டுள்ள பாடங்களை மாணவர்கள் எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் பயிற்சி கையேடு தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

No comments:

Post a Comment