ஆசிரியர் காலிப் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அரசாணை வெளியீடு


  • பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: 
  • அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 3,624 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. 
  • மாணவர்கள் நலன்கருதி பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை 3 மாதங்களுக்கு இப்பணியிடங்களுக்கு மாதம் ரூ.7,500 தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய அனுமதி வழங்குமாறு தொடக்கக்கல்வி இயக்குநர் கோரியுள்ளார். 
  • அதையேற்று பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் பள்ளி மேலாண்மைக்குழு வாயிலாக 3,624 தமிழ்வழி இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நியமித்துக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது. 
  • இதற்கு தேவையான ரூ.8.15 கோடி நிதி இயக்குநரகத்துக்கு வழங்கப்படும். ஆசிரியர் நியமனம் எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காத வண்ணம் நடைபெற வேண்டும். 
  • மேலும், தேர்வாகும் ஆசிரியர்களுக்கு தலைமை ஆசிரியர்கள் பணிநியமன ஆணை மற்றும் பணிச்சான்று வழங்கக்கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment