ஆசிரியருக்கு பயிற்சி தரும் சிபிஎஸ்இ முயற்சிக்கு வரவேற்பு


  • பொதுத்தேர்வை சிறந்த முறையில் நடத்தி முடிப்பதற்காக ஆசிரியர்களுக்கு சிபிஎஸ்இ வழங்கிய புத்தாக்க பயிற்சிக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. 
  • நாடு முழுவதும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின்( சிபிஎஸ்இ) பாடத்திட்டத்தில் 10, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பிப்ரவரி 15-ம் தேதி பொதுத்தேர்வுகள் தொடங்குகின்றன. 
  • இதற்கான அனைத்து விதமான முன்னேற்பாடுகளும் முடிக்கப்பட்டுள்ளன. 
  • மாணவர்களுக்கான ஹால்டிக்கெட்கள் கடந்த மாதம் வெளியிடப்பட்டு, செய்முறை தேர்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பொதுத்தேர்வுகளை சிறப்பாக நடத்துவதற்காக சிபிஎஸ்இ சார்பில் நாடு முழுவதும் சுமார் 13,379 ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. 
  • தவறுகள் நடைபெறாத வகையில் தேர்வை நடத்தி முடிக்கவும், தேர்வுப்பணிகளை துரிதமாக மேற்கொள்வது தொடர்பாகவும் இந்த பயிற்சிகள் வழங்கப்பட்டன. 
  • இதற்கு பள்ளி முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது பயிற்சி பெற்றவர்கள் இதர ஆசிரியர்களுக்கு வரும் நாட்களில் தேர்வுப்பணிகளுக்கு வழிகாட்டியாக செயல்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment