காவல்துறையில் 8,888 பணிகளை நிரப்ப தடை சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

இரண்டாம் நிலை காவலர் உள்ளிட்ட 8 ஆயிரத்து 888 பணிகளை நிரப்ப, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய அனைத்து தேர்வு நடவடிக்கை களையும் நிறுத்திவைக்க வேண் டும் என உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 4 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகளில் முறைகேடுகள் நடந்திருப்பது தெரியவந்துள்ள நிலையில், தமிழ் நாடு சீருடைப்பணியாளர் தேர் வாணையம் நடத்திய இரண்டாம் நிலை காவலர் உள்ளிட்ட பணி களுக்கான தேர்விலும் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடந் திருப்பதாக திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த அன்பரசன் உள்ளிட்ட 15 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

காவல் துறையில் இரண்டாம் நிலை காவலர் மற்றும் சிறைத் துறை வார்டன்கள், தீயணைப்பு வீரர்கள் என மொத்தம் 8 ஆயி ரத்து 888 பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் கடந்த 2019 மார்ச் மாதம் அறிவிப்பாணை வெளி யிட்டது. லட்சக்கணக்கானோர் பங் கேற்ற இந்த தேர்வில் எழுத்துத் தேர்வு, உடல்தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு என அனைத்து பணிகளும் முடிவடைந்துவிட்டன.

இந்நிலையில் கடந்த பிப்.2 அன்று வெளியிடப்பட்ட தற்காலிக தேர்வுப் பட்டியலில் ஒரே பயிற்சி மையத்தில் படித்த வேலூர் மாவட் டத்தைச் சேர்ந்த 1,019 பேரும், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 763 பேரும் தேர்வாகியிருப்பது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்துவ துடன் முறைகேடுகள் நடந்திருப் பதையும் ஊர்ஜிதப்படுத்தியுள்ளது.

கட்ஆஃப் மதிப்பெண்கள், தமிழ் வழியில் படித்தவர்களுக்கான இட ஒதுக்கீடு முறையாக வழங்கப்பட வில்லை. சீருடைப் பணியாளர் தேர் வாணைய அதிகாரிகள் உதவியுடன் அந்த தனியார் பயிற்சி மையம் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளது. இந்த முறைகேடுகளை போலீஸாரே விசாரித்தால் நியாயம் கிடைக்காது. எனவே இதுதொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண் டும். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக நேற்று நடந்தது. அப்போது மனு தாரர் தரப்பில், ‘‘எழுத்துத் தேர்வு பட்டியலில் 2 நபர்களின் பெயர்கள் இல்லை. ஆனால் இறுதி தேர்ச்சி பட்டியலில் அவர்களது பெயர்கள் இடம்பெற்றுள்ளன. தேர்வாணைய அதிகாரிகளுடன் கூட்டு சேர்ந்து ஒரு கும்பல் மிகப்பெரிய மோசடி யில் ஈடுபட்டுள்ளது” என வாதிடப் பட்டது. அப்போது, இதுதொடர்பாக பதிலளிக்க ஒருவாரம் அவகாசம் வேண்டும் என அரசு தரப்பில் கோரப்பட்டது.

அதை ஏற்க மறுத்த நீதிபதி, “தமிழக அரசு நடத்தும் அனைத்து தேர்வுகளிலும் முறைகேடு நடப்பது வருத்தம் அளிக்கிறது. இதனால் அரசு மீதான நம்பிக்கையை போட்டித் தேர்வர்கள் இழக்க நேரிடும். இதுபோன்ற போட்டித் தேர்வுகளை எழுதி அரசு வேலை வாய்ப்புக்காக காத்திருப்பவர்கள் ஒன்றும் வசதிபடைத்தவர்கள் அல்ல. அரசு வேலை கிடைக்காதா என்ற ஏக்கத்தில் இருப்பவர்கள். அரசு வேலைக்காக கடுமையாக உழைப்பவர்கள். பெரும்பாலா னோர் கிராமப்புறங்களை சேர்ந்த வர்கள்.

ஆனால் சீருடைப் பணி யாளர் தேர்வாணையம் நடத்திய இந்த தேர்வில், ஒரு குறிப்பிட்ட பயிற்சி மையத்தில் இருந்து மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றிருப்பது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

அதிலும் குறிப்பாக அவர்களில் பலர் எப்படி ஒரே மாதிரியாக 69.5 என்ற மதிப்பெண்ணை பெற முடிந்தது? எழுத்து தேர்வுக்கான பட்டியலில் இடம்பெறாத 2 பேர் உடல் தகுதிதேர்வில் எப்படி பங்கேற்றனர்? இதுபோன்ற மோச டிப் பேர்வழிகளை காவல் துறையில் அனுமதித்தால் காவல்துறையின் நிலை என்னவாகும்? இதுபோன்ற செயல்களின் மூலமாக நம்முடைய நேர்மையை நாம் கொஞ்சம், கொஞ்சமாக இழந்து வருகிறோம். அரசு பணிக்கான தேர்வு நேர்மை யாகவும், நியாயமாகவும் நடைபெற வில்லை என்றால் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியைத்தான் சந்திக்க நேரிடும்” என கருத்து தெரிவித்தார்.

அதன்பிறகு நீதிபதி, இரண்டாம் நிலை காவலர் உள்ளிட்ட பணி களை நிரப்ப சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய அனைத்து தேர்வு நடவடிக்கை களையும் நிறுத்தி வைக்க உத் தரவிட்டு, இதுதொடர்பாக தமிழக அரசு மற்றும் சீருடைப்பணியாளர் தேர்வாணையம் பதிலளிக்க உத்தரவிட்டார்.

மேலும், கடந்த 10 ஆண்டு களில் இதுபோல முறைகேடுகள் நடந்துள்ளதா என்பது குறித்தும் விளக்கம் அளிக்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டு விசார ணையை வரும் மார்ச் 5-க்கு தள்ளி வைத்துள்ளார்.

No comments:

Post a Comment