5, 8-ம் வகுப்புகளுக்கு மாணவர்கள் நலன் கருதியே பொதுத்தேர்வு ரத்து அமைச்சர் செங்கோட்டையன் தகவல்


  • மாணவர்கள் நலன் கருதி 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப் பட்டுள்ளது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் தெரிவித்தார். 
  • கோபி அடுத்த குள்ளம்பாளை யத்தில் அமைச்சர் செங்கோட்டை யன் செய்தியாளர்களிடம் கூறியதா வது: 5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட் டுள்ளது. இத்தேர்வுக்காக மாண வர்களிடம் தனியார் பள்ளிகள் கட்டணம் வசூல் செய்திருந்ததால், அதை திருப்பி அளிக்க வேண் டும். 
  • பொதுத்தேர்வு ரத்து செய்யப் பட்டதற்கு எதிர்கட்சிகள் கார ணம் அல்ல. 
  • மாணவர்களின் நலன் கருதி, அவர்களுக்கு ஊக்கத் தையும், ஆக்கத்தையும் தரும் அளவுக்கு மீண்டும் பயிற்சி அளித்து பரிசீலனை செய்யலாம் என்ற காரணத்தால் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. 
  • மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை குறித்து தற்போது வரைவு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. 
  • முழு விவரம் வந்தால்தான் அது குறித்து ஆய்வு செய்ய முடியும். கட்டாயக் கல்வி திட்டத் தில் மாணவர்கள் சேர்க்கையை கண்காணிக்கதான் ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. 
  • நீட் தேர்வுக்கு கையெழுத்திட்டது காங்கிரஸ் ஆட்சிதான். அவர்கள்தான் நீட் தேர்வுக்கு விலக்கு வேண்டும் என்று போராட்டம் நடத்துகின்றனர் என்றார்.


No comments:

Post a Comment