5, 8-ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்து புதிய அரசாணை

  • தமிழகத்தில் 5 மற்றும் 8-ம் வகுப்பு களுக்கான பொதுத்தேர்வை ரத்து செய்து புதிய அரசாணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. 
  • மத்திய அரசு கொண்டுவந்த குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமை திருத்த சட்டத்தில், நாடு முழு வதும் 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பாக அறிவிக் கப்பட்டிருந்தது. 
  • இந்தச் சட்டத்தை பின்பற்றி, தமிழக அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் 13-ம் தேதி அரசாணை ஒன்றை வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளில் பயிலும் 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டது. 
  • இதற்கு, தனியார் பள்ளி உரிமையாளர்கள், கல்வியாளர் கள், பல்வேறு அரசியல் கட்சி களின் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, அடுத்து வரும் 3 ஆண்டுகளுக்கு 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்கள் கணக்கில் கொள் ளப்படாது. 
  • தேர்ச்சி நிறுத்தி வைக் கப்படாது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித் தார். இருப்பினும், எதிர்ப்புக் குரல் தொடர்ந்து எழுந்தது. இதற் கிடையே தேர்வு நடத்துவதற்கு பள்ளிக் கல்வித் துறையும் தயாராகி வந்தது. 
  • இந்நிலையில், கடந்த பிப்.4-ம் தேதி முதல்வர் பழனிசாமி தலை மையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். 
  • பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை பரி சீலித்து, 5 மற்றும் 8-ம் வகுப்பு களுக்கு அறிவிக்கப்பட்ட பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுகிறது என்றார். 
  • அமைச்சரின் இந்த அறிவிப் புக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில், பள்ளிக் கல்வித் துறை செயலர் தீரஜ் குமார் அரசாணை வெளியிட்டுள்ளார். 
  • அந்த அரசாணையில், ‘2019 - 20-ம் கல்வி ஆண்டில் இருந்து 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி ஆண்டின் இறுதியில் பொதுத்தேர்வு நடத்த கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் 13-ம் தேதி வெளியிட்ட அரசாணையை ரத்து செய்து அரசு ஆணை யிடுகிறது. 
  • மேலும், ஏற்கெனவே உள்ள பழைய நடைமுறையே தொடரும்’ என்று தெரிவித்துள் ளார்.

No comments:

Post a Comment