5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பழைய நடைமுறையே தொடரும் அரசு பொதுத் தேர்வு ரத்து அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு


 • நடப்பாண்டில் 5 மற்றும் 8-ம் வகுப்பு களுக்கு நடைபெறுவ தாக அறிவிக்கப் பட்டிருந்த பொதுத்தேர்வு ரத்து செய் யப்படுவதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் அறிவித்துள்ளார். 
 • மேலும் ஏற்கெனவே உள்ள பழைய நடைமுறையிலேயே தேர்வுகள் நடத்தப் படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 • இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, 1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களையும் கட்டாயத் தேர்ச்சி செய்யும் நடைமுறை பின்பற்றப்பட்டு வந்தது. 
 • இதனால் கல்வித்தரம் பாதிக்கப்படுவ தாக பரவலாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. 
 • இதையடுத்து மாணவர்கள் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கத்தில் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவதற் கான சட்டத்திருத்தத்தை 2018-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்தது. அதன்படி, இந்த வகுப்புகளுக்கு நடைபெறும் ஆண்டு இறுதித்தேர்வில் தோல்வி யடையும் மாணவர்களுக்கு 2 மாதங்களில் உடனடித் தேர்வு நடத்தப்பட வேண்டும். 
 • அந்தத் தேர்விலும் மாணவர்கள் தோல்வி அடைந்தால் அதே வகுப்பில் தொடர்ந்து படிக்க வேண்டும். 
 • இந்த நடை முறையை பின்பற்றுவது தொடர்பான முடிவை அந்தந்த மாநிலங்களே தீர்மானித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது. 
 • அந்த சட்டத்திருத்தங்களின் படி தமிழகத்தில் 5 மற்றும் 8-ம் வகுப்பு களுக்கு நடப்பு கல்வியாண்டு முதல் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிகல்வித் துறை கடந்த செப்டம்பர் மாதம் அறிவிப்பு வெளியிட்டது. 
 • தமிழக அரசின் இந்த முடிவுக்கு ஆசிரியர்கள், கல்வி யாளர்கள் மற்றும் பெற்றோர் கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கள் எழுந்தன. 
 • இதுதவிர குழந்தைகளுக்கு தேவையில்லாத மனஅழுத்தத்தை ஏற்படுத்தும் என்பதால் அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என்றும் பரவலாக கோரிக்கைகள் எழுந்தன. 
 • ஆனால், “பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும். மாண வர்கள் நலன்கருதி முதல் 3 ஆண்டுகள் மட்டும் மாணவர்கள் தேர்ச்சி நிறுத்தி வைக்கப்படாது” என்று அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் அறி வித்தார். அதைத் தொடர்ந்து பொதுத் தேர்வுக்கான கால அட்ட வணையும் நவம்பர் மாதம் வெளியானது. 
 • இதற்கான முன்னேற்பாடுகளும் முடுக்கி விடப்பட் டன. மாநிலம் முழுவதும் 5, 8-ம் வகுப்பு படிக்கும் 19 லட்சம் மாண வர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டன. அதன்பின் குறைந்த மாணவர்கள் கொண்ட பள்ளிகளுக்கு வேறு இடங்களில் தேர்வு மையம் அமைத்தல், மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் மற்றும் சாதிச் சான்று கோரியது என்பன உட்பட சுற்றறிக்கை விவகாரமும் வெளி யாகி சர்ச்சையாகின. 
 • இதற்கு எதிர்ப்புகள் கிளம்பவே அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என கல்வித் துறை தெரி வித்தது. 
 • இதற்கிடையே, அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக் குறை, போதுமான கட்டமைப்பு வசதிகள் இல்லாத சூழலில் பொதுத்தேர்வு நடைபெற்றால் மாணவர்கள் இடைநிற்றலுக்கு வழிவகுக்கும். 
 • சிபிஎஸ்இ உட்பட மத்திய அரசின் கல்வி வாரிய பள்ளிகள் கூட இந்த விவகாரத்தில் இன்னும் முடிவெடுக்கவில்லை. ஆனால், தமிழக அரசு அவசர அவசரமாக அறிவிப்பை வெளியிட்டு பொதுத்தேர்வை நடத்துவதாக திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள், பாமக உள்ளிட்ட அரசியல் கட்சி கள் குற்றம் சாட்டின. 
 • மேலும், அமைச்சர் செங்கோட்டையனை நேரில் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மற்றும் சில ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகள், இந்தத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். 
 • தமிழக முதல்வர் பழனிசாமிக்கும் கோரிக்கை கடிதங்கள் அனுப்பப்பட்டன. 
 • மேலும் 5, 8-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு எதிராக ஆசிரியர்கள் சிலர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். சில அமைப்புகள் சார்பில் போராட்டங்களும் நடத்தப்பட்டன. 
 • எனினும், மாணவர் களின் அடிப்படை கற்றல் திறன்களை சோதனை செய்து, அதற்கேற்ப கற்பித்தல் பயிற்சியை மேம் படுத்தவே பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. 
 • இதனால் மாணவர்களின் தேர்ச்சி பாதிக்கப்படாது. எனவே, பொதுத்தேர்வு குறித்து மாண வர்கள், பெற்றோர் அச்சப்பட வேண்டாம் என பள்ளிக்கல்வி ஆணையர் சி.ஜி.தாமஸ் வைத் தியன் விளக்கம் தெரிவித்தார். 
 • இந்நிலையில், தமிழக அமைச்சரவைக் கூட்டம் சென்னை தலைமைச் செய லகத்தில் நேற்று நடைபெற் றது. கூட்டம் முடிந்த பின்னர் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பொதுத்தேர்வு ரத்து செய்யப் படுவதாகத் தெரிவித்தார். 
 • இதுகுறித்து அவர் வெளி யிட்ட அறிவிப்பில், ‘‘5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு 2019-2020-ம் ஆண்டு முதல் பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பாக கடந்தாண்டு அரசாணை வெளியிடப்பட்டது. இதுதொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் வரப் பெற்றன. 
 • அதை கவனமுடன் பரிசீலித்து, இந்த அரசாணையை ரத்து செய்ய அரசு முடிவெடுத்துள்ளது. எனவே, ஏற்கெனவே உள்ள பழைய நடைமுறையே தொடரும்’’ என்று கூறப்பட்டுள்ளது. 
 • இந்த அறிவிப்புக்கு தமி ழகம் முழுவதுமுள்ள ஆசிரியர் சங்கங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சமூக நல அமைப்புகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. பெற்றோர், கல்வியாளர்களும் அமைச்சர் செங் கோட்டையனின் அறிவிப்பை வரவேற்றுள்ளனர்.

No comments:

Post a Comment