குரூப்-4 முறைகேட்டில் தீவிரமாக தேடப்பட்டு வந்த இடைத்தரகர் ஜெயக்குமார் நீதிமன்றத்தில் சரண் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி திட்டம்


 • டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு விவ காரத்தில் சிபிசிஐடி போலீஸாரால் தீவிர மாக தேடப்பட்டு வந்த இடைத் தரகர் ஜெயக்குமார் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தார். 
 • புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர். 
 • டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வில் பெரிய அளவில் முறைகேடு நடந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்துமாறு தமிழக சிபிசிஐடி போலீ ஸாரிடம் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் நேரடியாக புகார் அளித்தனர். 
 • இதைத் தொடர்ந்து, டிஜிபி ஜாபர்சேட் நேரடி மேற்பார்வையில், எஸ்.பி. மல்லிகா தலைமையிலான தனிப்படை போலீ ஸார் கடந்த 31-ம் தேதி வழக்குப் பதிவுசெய்து விசாரணையை தொடங் கினர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசா ரணையில், குரூப்-2ஏ தேர்விலும் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப் பட்டது. 
 • முறைகேடாக தேர்வு எழுதி அரசுப் பணியில் சேர்ந்தவர்கள், இடைத் தரகர் கள், மோசடிக்கு முக்கிய நபராக செயல் பட்டவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப் பட்டு வருகின்றனர். 
 • இதுவரை 32 பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 
 • முறைகேடு வழக்கில் இடைத் தரகராக செயல்பட்ட சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் தொடர்ந்து தலைமறைவாக இருந்தார். போலீஸார் தீவிரமாக தேடியும் சிக்க வில்லை. 
 • இதையடுத்து, அவரைப் பற்றி தகவல் கொடுத்தால் ரூ.1 லட்சம் சன்மா னம் வழங்கப்படும் என்று சிபிசிஐடி போலீஸார் அறிவித்தனர். அவரை தேடி ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கும் தனிப்படை போலீ ஸார் விரைந்தனர். 
 • அனைத்து காவல் நிலையங்களுக்கும் அவரது புகைப்படம் அனுப்பி வைக்கப்பட்டு, பல்வேறு மாநிலங்களிலும் தேடுதல் வேட்டை நடத் தப்பட்டது. அவரது வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. 
 • ஆனாலும் அவரது இருப்பிடம் தெரியவில்லை. இந்நிலையில், சென்னை சைதாப் பேட்டை 23-வது குற்றவியல் நீதிமன்றத் தில் குற்றவியல் நடுவர் கவுதமன் முன்பு ஜெயக்குமார் நேற்று காலை சரணடைந்தார். 
 • அவரது வழக்கறிஞரும் உடன் வந்திருந்தார். பின்னர், குற்றவியல் நடுவர் உத்தர வின்பேரில், 14 நாள் நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் ஜெயக்குமார் அடைக்கப் பட்டார். 
 • அவரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸார் முடிவு செய்து, அதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். மோசடியில் தொடர் புடைய முக்கிய குற்றவாளி உட்பட அனைவரும் விரைவில் கைது செய்யப் படுவார்கள் என சிபிசிஐடி பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர். 
 • மேலும், குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக கைதான டிஎன்பிஎஸ்சி ஊழியர் ஓம்காந்தனை 5 நாள் காவலில் எடுத்து விசாரித்துவரும் போலீஸார், அவரை ராமேசுவரம் அழைத்துச் சென்று விசாரிக்க முடிவு செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் செய் யாறை சேர்ந்தவர் சென்னை மாநகர ஆயுதப்படை காவலர் தே.பூபதி. சென்னை காவல் ஆணையர் அலு வலக 5-வது தளத்தில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறை துணை ஆணையர் அலுவலகத்தில் பணியாற்றி வந்தவர். இவர், குரூப்-2ஏ தேர்வர்கள் 5 பேரிடம் ரூ.55 லட்சம் பெற்று விழுப்புரம் மாவட் டம் அரியூர் கிராம நிர்வாக அலுவலர் நாராயணன் மூலம் ஜெயக்குமாரிடம் கொடுத்து, 5 பேரை தேர்ச்சி பெற வைத்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, பூபதி கைது செய்யப்பட்டிருந்தார். இதே போல, மற்றொரு ஆயுதப்படை காவலர் சித்தாண்டியும் கைது செய்யப்பட்டிருந் தார். 
 • இவர்கள் 2 பேரையும் பணி இடைநீக்கம் செய்து காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தர விட்டுள்ளார்.

No comments:

Post a Comment