சமீபத்தில் தேர்வு முடிவடைந்த நிலையில் குரூப்-4 காலி பணியிடங்கள் 9,882 ஆக அதிகரிப்பு


  • டி.என்.பி.எஸ்.சி. நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- அரசுத் துறைகளில் 2018-19, 2019-20-ம் ஆண்டுக்கான காலி பணியிடங்கள் அன்றைய நிலவரப்படி 6,491 என அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு துறையிலும் இருந்து புதிதாக பணியிடங்கள் பெறப்பட வாய்ப்புள்ளது என்றும், இதனால் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை தோராயமானது என்றும், எந்த நேரத்திலும் மாற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 
  • அடிப்படையில் சில துறைகளில் இருந்து பெறப்பட்ட காலி இடங்களை கணக்கில் கொண்டு, 25.11.2019 அன்று 9,398 ஆக அதிகரிக்கப்பட்டது. தற்போது கூடுதலாக 484 இடங்கள் அதிகரிக்கப்பட்டு, 9,882 காலி இடங்களாக அறிவிக்கப்படுகிறது. 
  • காலி பணியிடங்களின் எண்ணிக்கை அதிகமாவது வழக்கமான ஒன்றுதான். 
  • இதற்கு முன்னர் நடந்த குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, ஒருங்கிணைந்த என்ஜினீயர் பணிகளுக்கான தேர்வுகளிலும் நடந்துள்ளன. தற்போது இறுதி செய்யப்பட்டுள்ள 9,882 காலி பணியிடங்களுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ள தேதிகள் விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • இந்த குரூப்-4 தேர்வில்தான் முறைகேடு நடந்து தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணையில் குற்றவாளிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment