குரூப்-4 தேர்வு விவகாரத்தைத் தொடர்ந்து குரூப்-2ஏ தேர்வு முறைகேட்டில் அரசு ஊழியர்கள் 2 பேர் கைது இடைத்தரகர் ஜெயக்குமார் ஆந்திராவில் பதுங்கல்


 • குரூப்-2ஏ தேர்வு முறைகேடு விவகாரம் தொடர்பாக காரைக்குடி சார்பதிவாளர் அலுவலக உதவியாளர் வேல்முருகன் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
 • முக்கிய நபரான இடைத்தரகர் ஜெயக்குமாரை பிடிக்க ஆந்திரா வுக்கு சிபிசிஐடி போலீஸார் விரைந் துள்ளனர். 
 • டிஎன்பிஎஸ்சி குருப்-4 தேர்வில் முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
 • முறைகேட்டில் ஈடுபட்ட 99 தேர்வர்கள் நிரந்தர தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 
 • இதுதவிர அரசு அதிகாரிகள், இடைத்தரகர்கள், பணம் கொடுத்து தேர்ச்சி பெற்றவர்கள் என 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
 • மேலும் பலரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் தொடர் புடையை இடைத்தரகர் ஜெயக் குமார் தலைமறைவாக இருக்கி றார். 
 • அவர் ஆந்திராவில் பதுங்கி இருக்கலாம் என்ற தகவல் கிடைத் துள்ளது. அதைத் தொடர்ந்து 4 பேர் கொண்ட சிபிசிஐடி தனிப் படையினர் ஆந்திராவில் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். 
 • இந்நிலையில், ஜெயக்குமாரின் புகைப்படத்தை வெளியிட்டு, அவர் குறித்து விவரம் தெரிந்தால் உடனே தகவல் தெரிவிக்கும்படி சிபிசிஐடி போலீஸார் அறிவிப்பு வெளியிட்டனர். 
 • அதைப்பார்த்து ஒருவர் கொடுத்த தகவலின்பேரில் மேல்மருவத்தூர் பகுதியிலும் போலீஸார் தேடிவருகின்றனர். 
 •  இதேபோல் குரூப்-2ஏ தேர்வி லும் முறைகேடு குறித்த புகாரின் பேரில், சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
 • இதில், சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படையில் உதவி ஆய் வாளராக இருக்கும் சித்தாண்டி என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. 
 • சித்தாண்டியின் மனைவி மற்றும் தம்பி, தம்பியின் மனைவி, மற்றொரு தம்பி என 4 பேர் கடந்த ஆண்டு குரூப்-2 தேர் வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 
 • இவர்கள் அனைவரும், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால், ராமநாதபுரத்தை மைய மாக கொண்டு தேர்வு எழுதி, மாநில அளவில், முதல் 10 இடங்களுக்குள் தேர்ச்சி பெற்றுள் ளனர். 
 • மேலும், சித்தாண்டி இடைத்தர கராகவும் செயல்பட்டு பலரிடம் பணம் வாங்கிக்கொண்டு, அரசு வேலை வாங்கி கொடுத்து இருக் கிறார். இதுகுறித்து, சிபிசிஐடி அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தினர். 
 • சித்தாண்டியின் தம்பி வேல்முரு கன் காரைக்குடி சார் பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். 
 • குரூப்-2ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக அவரை சிபிசிஐடி போலீஸார் சென்னை அழைத்து வந்து கடந்த 4 நாட்களாக விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று அவரை கைது செய்தனர். 
 • அண்ணன் சித்தாண்டி மூலம் பணம் கொடுத்து பணியில் சேர்ந்த தால் அவரை கைது செய்திருப் பதாக சிபிசிஐடி போலீஸார் தெரிவித்துள்ளனர். 
 • இதேபோல, திருநெல்வேலி மாவட்டம் வில்லிப்புத்தூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் உதவி யாளராக இருக்கும் ஜெயராணி என்பவரையும் சிபிசிஐடி போலீ ஸார் நேற்று கைது செய்தனர். 
 • இவ ரும், இடைத்தரகர் மூலம் பணம் கொடுத்து பணியில் சேர்ந்ததால் கைது செய்திருப்பதாக சிபிசிஐடி போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்தத் தேர்வு முறைகேடுகள் வழக்கில் டிஎன்பிஎஸ்சியின் கீழ் மட்ட ஊழியர்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 
 • முறைகேட்டில் தொடர் புடைய உயர் அதிகாரிகள் ஒருவர் மீதுகூட இதுவரை நட வடிக்கை எடுக்கப்படவில்லை என்று தேர்வர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
 • தேர்வு முறைகேடுகள் வழக்கில் டிஎன்பிஎஸ்சியின் கீழ்மட்ட ஊழியர்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 
 • முறைகேட்டில் தொடர் புடைய உயர் அதிகாரிகள் ஒருவர் மீதுகூட இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை

No comments:

Post a Comment