33 சதவீத தமிழக நடுநிலைப் பள்ளிகளில் உரிய ஆசிரியர்கள் இல்லை. மத்திய அரசு அதிர்ச்சி தகவல்.

  • தமிழ்நாட்டில் உள்ள 3ல் 1 பங்கு அரசு நடுநிலை பள்ளிகளில் பாட ஆசிரியர்கள் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 
  • மத்திய அரசின் சர்வசிக்ஷ அபியான் திட்டத்தின் ஒப்புதல் குழு கூட்டத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பாட ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. 
  • அரசு பள்ளிகளுக்கான கல்வி தர நிர்ணய பட்டியலில் மொத்தம் 180 புள்ளிகளுக்கு தமிழ்நாடு அரசுப் பள்ளிகள் வெறும் 48 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளன. நடுநிலை பள்ளிகளில் 33% அளவிற்கு பாட ஆசிரியர்கள் நியமிக்கப்படாததே இதற்கு காரணம் என்று மத்திய அரசு கூறியுள்ளது. 
  • தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 6,966 நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. அதில் 8.46 லட்சம் மாணவர்கள் பயின்றுப வருகின்றனர். ஆனால் நடுநிலை பள்ளிகளில் 1 தலைமை ஆசிரியர் உட்பட 3 ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்படுகின்றனர் என்பது ஆசிரியர்களின் புகாராகும். 
  • 5 பாடங்களையும் 3 ஆசிரியர்களே கையாள்வதாக மத்திய அரசு தெரிவித்து இருக்கிறது. கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் இயங்கும் நடுநிலைப் பள்ளிகளில் 2 ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித் துறை ஆசிரியர்களை குறைத்து வருவதாக ஆசிரியர் சங்கங்கள் குற்றம் சாட்டி உள்ளனர். 
  • 31 மாணவர்களுக்கு 2 ஆசிரியர்கள் தேவை என்பது இவர்களின் கோரிக்கையாகும்

No comments:

Post a Comment