ஏடிஎம்களில் இனி 2 ஆயிரம் ரூபாய் நோட்டு வழங்கப்படாது இந்தியன் வங்கி அறிவிப்பு

வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் சில்லறை பிரச்சினையைக் கருத்தில்கொண்டு, ஏடிஎம் இயந்திரங்களில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு கள் வழங்கப்படுவது நிறுத்தப்படும் என இந்தியன் வங்கி அறிவித்துள்ளது.

இதுகுறித்து இந்தியன் வங்கி வெளி யிட்டுள்ள சுற்றறிக்கை:

இந்தியன் வங்கி ஏடிஎம்களில் தற்போது ரூ.2 ஆயிரம், ரூ.500, ரூ.200 மற்றும் ரூ.100 நோட்டுகள் வழங்கப்படுகின்றன. இந்நிலை யில், ஏடிஎம்களில் வழங்கப்படும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுக்கு கடைகளில் சில்லறை பெறுவதில் பொதுமக்களுக்கு பெரும் சிரமம் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது. எனவே, அவர்கள் மீண்டும் வங்கிக்கு வந்து சில்லறை பெறும் நிலை ஏற்படுகிறது. எனவே, பொதுமக்களுக்கு ஏற்படும் இந்த சிரமத்தைப் போக்கும் வகையில், இனி இந்தியன் வங்கி ஏடிஎம் இயந்திரங்களில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வழங்கப்பட மாட்டாது. ஏடிஎம் இயந்திரங்களில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை நிரப்புவதை உடனடியாக நிறுத்தும்படி வங்கியின் அனைத்து கிளைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மார்ச் 1-க்குப் பிறகு அனைத்து இந்தியன் வங்கி ஏடிஎம் இயந்திரங்களிலும் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை வைக்கும் வசதி நீக்கப்பட்டு, அந்த இடத்தில் ரூ.200 நோட்டுகள் வைக்கப்படும். அதே நேரத்தில் டெபாசிட் இயந்திரங்களில் வாடிக்கையாளர் கள் வழக்கம் போல 2 ஆயிரம் ரூபாய் நோட்டு களை டெபாசிட் செய்யலாம். அதை வங்கி ஏற்றுக் கொள்ளும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment