இக்னோ மாணவர் சேர்க்கை விண்ணப்பிக்கும் அவகாசம் பிப். 28-ம் தேதி வரை நீட்டிப்பு

  • இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலை.யில் 2020-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் காலஅவ காசம் பிப்ரவரி 28-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 
  • இதுகுறித்து இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல் கலைக்கழகம் (இக்னோ) வெளி யிட்ட செய்திக்குறிப்பு: இக்னோ பல்கலைக்கழகத் தில் இளநிலை, முதுநிலை, சான்றிதழ் மற்றும் பட்டயப் படிப்புகள் என 227 பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. 
  • இதில் 127 படிப்புகளில் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு முழுமையாக கட்டண விலக்கு அளிக்கப்படுகிறது. 
  • அதன்படி 2020-ம் ஆண்டு மாணவர் சேர்க் கைக்கான இணையதள விண்ணப்பப்பதிவு கடந்த பிப். 15-ம் தேதி முடிந்துவிட்டது. 
  •  தற்போது மாணவர்கள் நலன் கருதி விண்ணப்பிப்பதற்கான அவகாசம் பிப்.28-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 
  • விருப்ப முள்ளவர்கள் www.ignouadmissi on.samrath.edu.in/ என்ற இணைய தளம் வழியாக விண்ணப்பிக் கலாம். 
  • எஸ்சி, எஸ்டி பிரிவு சேர்ந்தவர்கள் மட்டும் இக்னோ அலுவலகங்களில் நேரிடியாக விண்ணப்பிக்க வேண்டும். 
  • கூடுதல் தகவல்களை www.ignou.ac.in இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment